பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 திருக்குறள் விழுவனென்றவாறு. அ 937. பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் என்பது ஒருவன் அறம் பொருளின்பங்கள் செய்யாமல் சூதம் ஆடு கிறத்திலே பொழுது போக்கினானாகில், அந்தச்சூதம் அவன் செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கடிக்கு மென்ற வாறு. ஆகவே குதமாடாமல் அறம்பொருளின் பங்களையே செய்ய வேணுமென்பதாம். α. Η 1938. பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளிஇ யருள்கெடுத் தல்ல லுழப்பிக்குஞ் சூது என்பது சூதாடினவனுக்கு அந்தச் சூதம் செய்கிற காரியம் அவன் பொருளை யெல்லாங் கெடுத்துப் போட்டுப் பொய் சொல்லத் தக்கதாகப்பண்ணித் தயையையுங் கெடுத்து இம்மையிலேயும் மறுமையிலேயும் துக்சும் பண்ணுவிக்கும' என்றவாறு. .عكس 939. உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து மடையாவா மாயங் கொளின் என்பது ஒருவன் சூதத்தை வினோதமான தொழிலென்று ஆடினா னாகில், அவனுடைய பிரகாசமும் கல்வியும் செல்வமும் நடை யுடைபாவனையும்" ஆகாரமும் இந்த ஐந்து வகையுங் கெட் டுப்போ மென்றவாறு. க 940 இழத்தொறு உங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப முழத்தொறு உங் காதற் றுயிர் என்பது 1. ஆடுகிறதிலே 2. சூது பண்ணிவிக்கும் என்பது காகிதச் சவt சி. உடையும் - அச்சநூல்