பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 திருக்குறள் 1048. இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலு நிரப்பு என்பது நேற்றுக் கொல்லுகிறது போலே வந்து பொல்லாத காரி யத்தைச் செய்த தரித்திரம், இன்றைக்கும் என்னிடத்தில் வரு கிறதோ' வந்தாலதற்கு நானென்ன செய்வ னென்றவாறு. பொல்லாத காரிய மாவது, முன் சொல்லிய துன்பங்களாம் 104 9. நெருப்பினுட் டுஞ்சலு மாகும் நிரப்பினுள் யாதொன்றுங் கண்பா டரிது என்பது மந்திரம் மருந்துகளினாலே ஒருவனுக்கு நெருப்புக்குள்ளே நித்திரை பண்ணலாம்: தரித்திரம் வந்தால் ஒன்றிலேயும் நித்திரை வாரா தென்றவாறு. நெருப்பினும் தரித்திரம் பொல்லாதென்பதாம். சித 1050. துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று என்பது அனுபவிக்க வேண்டும் பொருள்களில்லாதவர்கள் தங்களாற் செய்யத் தக்கதாவது, துறந்து சன்னாசம் பண்ணுகிறதே; அது செய்யாவிட்டால் பிறத்தியார் வீட்டில்ே யிருக்கிற உப்புக்கும் காடிக்கும் கூற்றுவனா மென்றவாறு. தரித்திரனானவனுக்கு மான மழியாமற் செய்யவேண்டினது துறவேயாம்; சுற்றத்தார் சேராமல் துறந்தாலும் தான் துறந் தவன் கனம் பெறுவ னென்பது. Ꭷ )அதிகாரம் க்குக் குறள் சதடு = به 1. வருகுதோ - காகிதச்சுவடி