பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

447


1088. ஒண்ணுதற் கோஓ வுடைந்ததே ஞாட்பினுள்

நண்ணாரு முட்குமென் பீடு

என்பது

முகத்தினாலே வருகிற வருத்தம் கூறுகிறது.

போர்க்களத்திலே வந்து எதுத்தவர்கள்[1] எல்லாம் என்னுடைய பெலத்துக்குப் பயப்பட்டு ஓடிப் போவார்கள்; அப்படிக்கொத்த கெட்டி வலுமை இவளுடைய முகத்துக்கு மாத்திரமே பயப்பட் டழிந்த தென்ற வாறு.

பயப்படுகிறது, மதியழிகிறதாம்.

1089. பிணையேர் மடநோக்கு நாணு முடை யாட்கு

அணியெவனோ வேதில தந்து

என்பது

ஆபரண நலத்தினாலான வருத்தம் கூறியது. இவள் பார்வை புறத்தியிலே[2] மான் பிணையோ டொத்த பார்வையையும், உள்ளே நாணத்தையு முடைய இவளுக்கு இதுவே ஆபரணமாயிருக்க வேறே ஆபரணங்களை அணிகிறத்தினாலே[3] என்ன பலனுண் டென்றவாறு.

மான்பார்வை, பயப்பட்டுப் பார்க்கிறதாம்.

1090. உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்த லின்று

என்பது

தலைமகள் குறிப்பறியப் பட்டவன்[4] சொல்லுகிறது காய்ச்சப்பட்ட கள்ளுத் தன்னைக் குடித்தவனைக் களிப்பிக்கிற தல்லாமல், காமத்தைப் போலே கண்டவர்களை மகிழப்பண்ண மாட்டா தென்றவாறு.

காமம் கண்டவர்களை யெல்லாம் மகிழப்பண்ணு


  1. எதிர்த்தவர்கள்
  2. புறத்தே
  3. அணிகிறதினாலே
  4. குறிப்பறிந்தவன்