பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

448

திருக்குறள்

மென்பதாம்.

ஆக அதிகாரம் ள௬ க்குக் குறள் சத சா௰

இப்பால் 110. குறிப்பறிதல்

என்பது,

தலைமகன் தலைமகள் குறிப்பினை யறிதலும் தோழி குறிப்பினை *அத்தோழி அவ்விருவர் குறிப்பினையு* மறிதலுமாம்.

1091. இருநோக் கிவளுண்க ணுள்ள தொருநோக்கு

நோய் நோக்கொன் றந்நோய் மருந்து

என்பது

தலைமகன் தலைமகள் மனதுக்குறிப்பினை அவள் பார்வையால் அறிந்தது

இவளுடைய கண்களின் பார்வைகள் இப்பொழுது என்மேல் இரண்டு வகை யாச்சுது[1]: அதெப்படி யென்றால், ஒரு பார்வை என்னை வாதை செய்விக்குது[2]: ஒரு பார்வை அதற்கு மருந்தாய் அந்த வாதையைத் தணிப்பிக் கிறதாச்சுது[3] என்றவாறு

வாதை செய்விக்கிறதாவது, அவன் மனதிலே யிருக்கிற காம விகாரத்தை வெளியாக்குகிறது. வாதையைத் தணிப்பிக்கிறதாவது, தன் பேரிலே தயை வைக்கிறதாம்.

1092. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்

செம்பாக மன்று பெரிது

என்பது (இதுவுமது)

இவள் கண்கள் நான் காணாத படிக்கு என்னைப் பார்க்கிற பார்வை புணர்ச்சியிலே பாதியல்லாமல் அதிகமாக வேணுமென்று பார்க்கிற தென்றவாறு


*முதல் *வரை அச்சு நூல்

  1. ஆயிற்று
  2. செய்விக்கிறது
  3. தாயிற்று