பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜைன உரை

457

அனிச்சப்பூவே நீ நன்றாய் வாழ்வாயாக; நீ எல்லாப் பூவினும் மென்மை யுடையை யாயினும், எம்மாலே காதலிக்கப்பட்டவள் நின்னைப் பார்க்கிலும் மெல்லிய ளென்றவாறு

1112. மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண்

பலர்காணும் பூவொக்கு மென்று

என்பது இடந்தலைப்பாட்டின் கண் சொல்லியது

பொல்லாத நெஞ்சே! நானே காணப் பெற்ற இவள் கண்களைப் பலராலும் காணப்படும் பூக்களை ஒக்கும் என்று நினைத்துத் தாமரை குவளை நீலோற்பலம் முதலிய பூக்களைக் கண்டு மயங்கா நின்றாய்; நின் அறிவிருந்தவாறென்? என்றவாறு.

1113. முறிமேனி முத்த முறுவல் வெளிநாற்றம்

வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு

என்பது

கூட்டுதலுற்ற பாங்கனுக்குத் தலைமகன் தலைமகளியல்பு கூறியது.

மூங்கில் போலும் தோளினை யுடையவளுக்கு நிறம் தளிர் போலேயிருக்கும்; பல் முத்துக்கள் போலே யிருக்கும்; சுபாவமாகிய மணம் சுகந்த வாசனையாயிருக்கும்; கண்கள் வேலாயுதம் போலிருக்கும் என்றவாறு.

1114. காணிற் குவளை கவிழ்ந்து நிலனோக்கு

மாணிழை கண்ணொவ்வே மென்று

என்பது பாங்கற் கூட்டத்துச் சென்று சார்தலுறுவான்சொல்லியது.

குவளைப் பூக்கள், இவள் கண்களைக் கண்டால்இவற்றுக்குச் சரியொவ்வே மென்று நினைந்து, நாணித் தலையை யிறைஞ்சி நிலத்தைப் பார்க்கும்.

நல்ல வியற்கையுடையவளின கண்களைக் காணாதபடி