பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/502

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



500

திருக்குறள்

1235. (கொடியார் கொடுமை யுரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்)*

என்பது இதுவுமது

கட்டிக் கொண்டிருக்கிற கை நெகிழ்ந்தாலும் பொறாதவளுக்கு இத்தனை நாள் பிரிந்தால் எப்படியோ வென்று நினையாது கொடிய நாயகனுடைய கொடுமையைச் சொல்லா நின்றன. வளைகளும் கழன்று பழைய இயற்கையழகும் இழந்த இத்தோள்கள் என்றவாறு.

அவரோடு கலந்த தோள்களே சொல்லுவனவானால் அயலார் சொல்லுதல் சொல்ல வேண்டுமோ என்பதாம்.

1236. தொடியொடு தோணெகிழ நோவ லவரைக்

கொடிய ரெனக்கூற னொந்து

என்பது+

நான் பொறுத்துக் கொண்டிருந்தாலும், என் வயத்திலே நில்லாமல் வளைகள் கழலுமாறு தோள்கள் மெலிய அவற்றைக் கண்டு, நீ காதலரைக் கொடியர் என்று சொல்லுதலைப் பொறாது நோகின்றேன் என்றவாறு.

யானாற்றேன் ஆகில் அது அவர் வாராததற்கன்று, நீ கூறுகின்றதற்கு என்பதாம். எனவே நீ அவரைக் கொடியர் என்று சொல்ல வேண்டாம் என்பதாம்.

1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூச லுரைத்து

என்பது+

பொல்லாதவர் என்கிறவர்க்கு, நெஞ்சே! நீ போய் என் வாடிய தோளினால் விளைந்த சண்டையைச் சொல்லி, வெகுமானம் பெறவல்லையோ; வல்லையானால் அதற்குச் சரியானதொன்று


  • இக்குறள் சுவடியில் தரப்படவில்லை.

+இங்குப் பரிமேலழகர் தந்த துறைக் குறிப்பு இல்லை. +இங்கும் பரிமேலழகர் தந்த துறைக் குறிப்பு இல்லை