பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

513

நகை, புணர்ச்சி யின்பத்தால் நிகழ்வது.

1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கு மருந்தொன் றுடைத்து

என்பது, இதுவுமது

நெருங்கிய வளைகளை யுடையவள். என்கண் இல்லாத தொன்றனை மனத்திலே நினைத்துக் கொண்டு> அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு, என் மிகுந்த துக்கத்தினைத் தீர்க்கிற மருந்தொன்றுடைத்து என்றவாறு.

மறைத்தற்குறிப்பு - தானும் உடன் போக்கு உட்கொண்டது.

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்த லரிதாற்றி

யன்பின்மை சூழ்வ துடைத்து

என்பது[1]

வெகுவாய்ப் பிரியவசனங்கள் சொல்லி மிகவும் சந்தோஷத்துடனே கூடியிருக்கிறது, பிரிந்து போகிற துக்கத்துக்கு நாம் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டிச் செய்கிறது போலும் என்றவாறு.

பிரிந்து போதற் குறிப்பினால் செய்கின்ற தாகலான், இக்கலவி முடிவில் இன்னாதாகும் என்பதாம்.

1277. தண்ணந் துறைவன் றணந்தமை நம்மினும்

முன்ன முணர்ந்த வளை

என்பது[2]

குளிர்ந்த துறையினை யுடையவன் நம்மை உடம்பினாலே கூடியிருந்தே மனத்தால் பிரிந்தமையை, அவன் குறிப்பால் அறிதற்குரிய நம்மைப் பார்க்கிலும், இந்த வளைகள் முன்னே அறிந்தன என்றவாறு.


  1. இங்குப் பரிமேலழகர் தந்த துறைக் குறிப்பு இடம் பெறவில்லை
  2. இங்கும் அடுத்த குறட்கும் பரிமேலழகர் தந்த இதுவுமது தரப்படவில்லை