பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

521

1300. தஞ்சந்[1] தமரல்ல ரேதிலார் தாமுடைய

நெஞ்சந் தமரல் வழி

என்பது இதுவுமது

தமக்குரித்தாகிய நெஞ்சு ஒருவர்க்கு உறவல்லாவிட்டால் மற்றவர்கள் கூறவல்லராதல் சொல்லவேண்டுமோ என்றவாறு.

ஆக அதிகாரம் ள௩௰ க்குக் குறள் சந௩

இப்பால் 131. புலவி

என்பது, இருவர் நெஞ்சும் உணர்ச்சி விதும்பாது பிணங்க நினைத்த வழி ஒருவரோ டொருவர் பிணங்குகிறதாம்.

1301. புல்லா திராஅம் புலத்தை யவருறும்

அல்லனோய் காண்கம் சிறிது

என்பது, நாயகனைச் சேவித்த தோழி தலைமகளோடு நகையாடிச் சொல்லியது:[2]

நீ அவரொடு விரைவில் கூடாதே; பிணங்கி இரு; அவரது விரக துக்கத்தை நாம் சிறிது பார்ப்போம் என்றவாறு.

1302. உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது

மிக்கற்றா னீள விடல்

என்பது, புலவி யொழிந்து வாயில் நேரும் வரை அவள்[3] சொல்லியது:

பிணக்குக் கலவி யின்பத்துக்கு இனிதாயிருக்கும்: அதுவும் கலவிக்கு வேண்டின மட்டிலே செய்ய வேணும்: அப்படிச் செய்யாமற் பின்னையும் பிணங்கினால், இன்பமில்லாமற் போம்: அதெப்படி யென்னின், கறிக்கு உப்பு மட்டாய்ப் போட்டால் ருசியாய் இருக்கும்: உப்பு அதிகமானால் ருசியில்லாமற் கெட்டுப் போம் என்றவாறு.


  1. விரையாமல்
  2. குறிப்புரைகாண்க
  3. தோழி