பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்சேர்க்கை 1

சிலகுறள்கட்குச் ஜைநருரை


“திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைந சமய சித்தாந்த விளக்கமும்” என்ற நூலில் காண்பவை:

குறள் 1. அகரமுதல (பக்கம் 74)

உலகில் அகரமுதலாகிய எண் எழுத்து ஆகிய எல்லா எழுத்துக்களும் ஆதிபகவனை முதலாகவுடையன.

......... உலக என்பதில் ஏழாம் வேற்றுமையுருபு தொக்கது. எண் எழுத்துக்கள் ஆதிபகவனிடத்திலிருந்தே உண்டானவை யாதலின் அக்கடவுள் அவற்றிற்கு மூலபுருஷராயினார். பரிமேலழகர் பகவானுக்கு அகரத்தை உவமை கூறியிருக்கின்றார். குறளாசிரியர் அக்கடவுள் வாழ்த்திலேயே “தனக்குவமை யில்லாதான் றாள் சேர்ந்தார்க்கல்லான் மனக் கவலை மாற்ற லரிது” என்று கூறியிருப்பதால், பரிமேலழகர் ஆதிபகவானுக்கு அகரத்தை உபமானமாகச் சொல்லுவது பொருந்தாது. ஆதி பகவான் உபமாதிதர் என்பதை மேற்கூறிய குறளில் ஸ்பஷ்டமாக ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

2. கற்றதனாலாய (பக்கம் 82)

(மிகுதியான ) கேவல ஞானத்தை யுடைய அருகக் கடவுள் பாத கமலங்களை மனிதர் வணங்காராகில் அந்தப் பகவானால் அருளப்பட்ட அக்ஷரங்கள் முதலான கல்வியைக் கற்றதனால் பயனில்லை. வால்—மிகுதி, அறிவன்—கேவல ஞானத்தையுடையவன். கேவல ஞானம்—திரிகாலவுணர்ச்சி.

3. மலர்மிசை (பக்கம் 118)

தாமரை மலரின் மேல் நடந்தவனாகிய அருகக் கடவுளின் பெருமை பொருந்திய பாத கமலங்களை அடைந்தவர்கள் எல்லாவுலகங்களுக்கும் மேலாகிய மோக்ஷஸ்தானத்தில் எக்காலத்திலும் சலனமின்றி வாழ்வார்கள், ஆதிபகவான் மலர் மீது