பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைன உரை

551

உத்தமதபசு: பாஹ்யதவம் ஆறு, அப்யந்தா தவம் ஆறு ஆகப்பன்னிரண்டு தவத்தையும் செய்தல் (விரிவு ஜைநசமயசித் தாந்த விளக்கம் என்னும் நூல் பக்கம் 153 - 154 காண்க).

உத்தம ஆகிஞ்சன்யம் யாதொன்றின் மேலும் பற்றின்றித் துறத்தல்.

உத்தமத்தியாகம்; பரமாகமங்களை வியாக்கியானம் பண்ணி யருளும் சாஸ்திரதான சக்தி.

உத்தமபிரமச்சியம். ஸ்திரீகளைத் துதித்தல், அவர்களை விரும்பிப் பார்த்தல். அவர்களுடைய மொழிகளை விரும்பிக்கேட்டல் அவர்களுடன் சிரித்தல், அவர்களுடன் உறைதல் ஆகியவற்றினின்று நீங்கி விளங்குவது.

அடிக்குறிப்பு:

267.

சுக்கில தியானம் ஆவது நான்கு வகைப்படும் 1. ப்ரதக்த்வ விதர்க்கவீசாரம் - உயிர், உடல், அதற்குக் காரணமான வினை முதலியன வேறு வேறு தன்மைகளை யுடையன என்று அவற்றை நன்றாகத் தர்க்கம் செய்து அறிந்து பற்றறத் திகழ்தல்: 2. ஏகத்வவிதர்க்க வீசாரம்: ஆன்ம ஸ்வரூபத்தை மட்டும் தியானித்தல் இவ்விரண்டும் காதி கர்மங்களை நாசம் செய்யும் தன்மையன: 3.சூக்ஷம க்ரியா ப்ரதிபாதி : காதிவினை* கெட்டவுடன் தேவர்களியற்றிய கந்தகுடி முதலியவற்றை விட்டுத் தனியே சென்று தபோயோகத்தில் நின்று மனவசன காயங்களாகிய யோகங்களைச் சூட்சுமமாகச்செய்தல். 4. வ்யுபரதக் க்ரியா நிவ்ருத்தி; அகாதி வினை +யையும் வென்று முத்தியடைதல் (கிரியாகலாபம். பக்கம் 46-47)

*காதிவினை. ஞானாவரணீயம் 5, தரிசனாவரணிீயம் 9, மோஹனீயம் 28: அந்தராயம் 5; ஆக 47.

+அகாதிவினை : வேதனியம் 2; ஆயுஷ்யம் 4: நாமம் 93; கோத்திரம் 2: ஆக 101