பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 திருக்குறள் தகப்பன் பிள்ளைக்குச் செய்கின்ற நன்மையாவது அந்தப் பிள்ளை வித்துவான்கள் கல்வியையுடையவர்களிருக்கிற சபை யிலே வந்தா லவனை யந்தச் சபையிலே யிருக்கிறவர்கள் வாரு மிருமென்று சொல்லப் பண்ணி வைக்கிற கல்வியை அதிகமாக உண்டாகப் பண்ணுவிக்கிற தென்பதாம். திரவிய முதலானதுகளை யதிகமாக உண்டாகப் பண்ணி னால் துக்கம் வருமென்றவாறு. GT 68. தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லா மினிது என்பது தகப்பனைப் பாக்கிலும் பிள்ளை நல்லறிவுடனே கூடியிருந்தால் பூமியிலே யிருக்கப்பட்ட செனங்களுக்கெல்லாம் நன்மையா மென்றவாறு. நன்மையாகிறது ஒருவருக்குத் தீங்கு செய்யாமலிருக்கிறது என்றவாறு. تائے{ 69. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன் மகனைச் சான்றோ னெனக்கேட்ட தாய் என்பது தாயானவள் பிள்ளையைப் பெற்றபொழுதிருந்த சந்தோஷத் தைப் பார்க்கிலும் அதிகமான சந்தோஷத்தை யடைவா ளந்தப் பிள்ளையை நல்லவனென்று பெரியோர்கள் சொல்லக் கேட்ட பொழுதென்பதாம். அன 70. மகன்றந்தைக் காற்று முதவி யிவன்றந்தை யென்னோற்றான் கொல்லென்னுஞ் சொல் என்பது 8. பண்ணுகிறதான என்பது அச்சுநூல் 8. முதலியவற்றை