பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருக்குறள் தயை யில்லாதவர்கள் தாங்கள் தேடின வஸ்த்து வெல்லாந் தங்களுக் குரியதா யிருப்பார்கள்: அன்புடையார் தங்கள் பொருளுஞ் சரீரமும் பிறர்க் குரியதா யிருப்பர். ■ சரீரம் பிறர்க் குரித்தாய்’ சிறிது பொருளையுங் கொடுத்துத் தங்கள் கையிலே எண்ணிக்கொண்டு எடுக்கிறதும் பிடிக்கிறதுஞ் செய்வார்க ளென்றவாறு. a 73. அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் கென்போ டியைந்த தொடர்பு என்பது பெறுதற்கரிய மனுஷ சரீரத்தைப் பற்றி வருகிற தொடர்ச்சியை அன்பினாலே வந்ததென்று சொல்லுவரறிந்தோ ரென்ற வாறு.* சிட 74. அன்பீனு மார்வ முடைமை யதுவீனு நண்பென்னு நாடாச் சிறப்பு என்பது ஒருவனுக்குத் தயை யுண்டா யிருந்தா லது சந்தோஷத்தை யுண்டாக்கும்; அந்தச் சந்தோஷமே அவனுக்குப் பகைவரும் பிறத்தியாரு மில்லாமல் சகலமான பேரையுஞ் சினேகம் பண்ணு விக்கு மென்றவாறு. அF 75. அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு என்பது அன்புடைய வர்களே யில்லறத் தோடு பொருந்திய நெறியினை யுடையவர்கள்: உலகத்திலே சுகத்தை அனுப விக்கிற பேர் முந்தின சென்மத்திலே தயையுடையவர்களா யிருந்தவர்க ளென்பதாம். தயை யுடையவர்களுக்குப் பாபம் வராது. 1. படுகிறதைக் 2. குரியவரா 3. குரியரா 4. குரியராயிருக்கிறது என்பன அச்சுநூல் பிறசேர்க்கை குறிப்புகாண்க 1. புறத்தாரு