பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 of திருக்குறள் 124. நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற மலையினு மாணப் பெரிது என்பது தான்கொண்ட விரதஞ் சீலங்களின் வழியே நின்று அடங்கின வனுடைய பெருமை மலையைப் பார்க்கிலும் பெரிய தென்ற வாறு . அப 125. எல்லார்க்கும் நன்றாம் பணித லவருள்ளுஞ் செல்வர்க்கே செல்வந் தகைத்து என்பது பெருமை யில்லாமல் அடங்கி நடக்கிறது எல்லா ருக்கும் நல்ல தாம்; அதிலே யும் அயிசுவரியவான்களடங்கி நடந்தா லந்த அடக்கம் பின்னை யுமொரு அயிசுவரிய முண்டானாற் போலு மென்றவாறு. கல்வி குடிப்பிறப்பு முடையார் அடங்கி நடந்தால் மிகவும் நன்றென்றவாறு. டு 126, ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி னெழுமையு மேமாப் புடைத்து என்பது ஒருபிறப்பிலே ஒருவன் ஐம் பொறிகளையும் அடக்க வல்ல வனாயி னந்த வடக்க மவனுக்கு ஏழு பிறப்பிலேயும் நன்மை யைத் தருமென்றவாறு, ஆமை மனுஷரைக் கண்டவுடனே பொறிகளை யடக்கிறாப் போலே பாவங்கள் வரவொட்டாமல் பொறிகளை யடக்க வேணு மென்றவாறு. அர 127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு எனபது தன்னாலே காக்க வேண்டின ஐம்பொறிகளையுங் காக்க மாட்டா விட்டாலும் நாவொன்றையுங் காக்க வேணும்: அதனைக் காரா" விட்டால் சொல்லுகிற வசனத்தினுடைய 1. அடக்குவது 2. காவா