பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 162

பகைவரே என் தலைவனின் முன்னே எதிர்த்துவந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்துநின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர். 771 காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும். 772 பேராண்மை என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர்நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒருகேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும். 773 தன் கைவேலினைக் களிற்றின்மீது எறிந்துவிட்டுப் படைக் கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்! 774 பகைவர்மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவுதரும் அல்லவோ! 775 கழிந்துபோன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான். 776 உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும். カ77 போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறையமாட்டார்கள். 778 தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர்தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்: 779 தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும். 780