பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் - அங்கவியல் 178

எல்லா உயிர்களுக்கும், பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், ‘இகல்" என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள். 851 தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்கக்கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது: 852 'மாறுபாடு என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கிவிட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை, அதுவே தரும். 853

"மாறுபாடு என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும். 854 தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றியபொழுது, அதனை ஏற்றுக்கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர், எவருமே இலர். 85.5 பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும். 856 இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதிநூற்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள். 857 தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றியபோது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும் அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடுவரும். 858 தனக்கு நல்ல காலம் வரும்போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப்பற்றி நினைக்கமாட்டான். தனக்குக் கேடு காலம் வரும்போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான். 859 'மாறுபாடு என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும்; நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும். 860