பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் ஒழிபியல் 202

ஒருவனுக்குப் பெருமை, பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன் என்னும் மனவூக்கமே இழிவாவது, அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்' என்று நினைப்பதாகும். 971 எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே. தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒருபோதும் ஒத்திருப்பதில்லை. 972 செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார் அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார். 973 கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத்தாமே காத்து ஒழுகுதலைப்போல, பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும். 974

பெருமை உடையவர்கள், தாம் வறுமையானபோதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விட மல் செய்துமுடிக்கும் வலிமை கொண்டவராவர். 975

இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்' என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒருபோதும் உண்டாகாது. 976 தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிறியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியைவிட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும். 977 பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள் மற்றைச் சிறுமை உடையவரோ எப்போதும் தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள். 978

பெருமை குணம் ஆவது, காரணம் உள்ளபோதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்றபோதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும். 979 பெருமை உடையவர், பிறரது மானத்தைப்பேசி, அவமானத்தை மறைப்பார்கள், சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள். 980