பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

பொருட்பால் - ஒழிபியல்

வீடு நிறையப் பொருளைச் சேர்த்துவைத்தும், உலோபத்தால்

{ტ ற (ტ ததுவைதது தத

தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான். 100] பொருளினால் எல்லாமே உண்டாகும் என்று அறிந்து, அதனை எவருக்கும் கொடாமல், அதன்மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும் f{}02 மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை. I()()3 ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ? l{}()4 இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் துகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடிகோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை. 1005 தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ் செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான். 1006 ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம். 1007 வறியவாாலே விரும்பி வாப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஒர் தச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும். 1008 உறவினரிடம் அன்புசெய்தலைவிட்டு, நுகராமல் தன்னையும் வருத்திக்கொண்டு, அறத்தையும் பாராது, ஒருவன் தேடிய பெரும்பொருளைப் பிறர்தாம் கொண்டுபோவார்கள். 1009 புகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை, மேகம் சிறிதுகாலம் வறுமைமிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன்மையை உடையதே. IOIC)