பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - இல்லற இயல் 48

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே! 2|| தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம், தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும். 212 ஒப்புரவைப்போலப் பலருக்கும் தன்மையான வேறொரு பண்பை இவ்வுலகத்திலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும். 213 எவ்வுயிரும் ஒத்த தன்மையானது என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன் ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான். 274 உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால்போலப் பலருக்கும் பயன்படுவதாகும். 215 செல்வம் நல்ல பண்பு உடையவனிடம் சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பதுபோலப் பலருக்கும் பயன் தருவதாகும். 216 செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணிதீர்க்கும் மருந்தாகிப் பயன்தரத் தவறாத மருந்துமரம் போல எப்போதும் பயன் தருவதாகும். 217 ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள். அதற்கேற்ற பொருள்வசதி இல்லாத காலத்திலும் முடிந்தவரை உதவத் தளர மாட்டார்கள். 218 ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும். 219 ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும். 220