பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 28. கூடா ஒழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். 27]

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தானறி குற்றப் படின். 272

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்த் தற்று. 273

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற் ஏதம் பலவும் தரும். (றென்று 275

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கனார் இல், 276

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. 277

மனத்தது மாசாக மாண்டார்நீர் ஆடி மறைந்தொழுகும் மாந்தர் பலர். 278

கணைகொடிது யாழ்கோடு செவ்விது.ஆங்கு அன்ன வினைபடு பாலாற் கொளல். 279

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின், 280