பக்கம்:திருக்குறள்-புதிய உரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் - துறவற இயல் 60

வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும், தம்முள்ளே சிரித்துக்கொண்டிருக்கும். 27? தன் நெஞ்சம், தான் அறிந்து செய்யும் குற்றத்திலே யும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத்தோற்றமும் என்ன பயனைச் செய்யும்? 272

மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பக, புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும். 273 தவக் கோலத்திலே மறைந்துகொண்டு தீயசெயல்களைச் செய்தல், கொலைகுறித்த வேடன் புதரின்பின் மறைந்து நின்று, பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும். 274 பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், 'என்ன செய்தோம்? என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும். 275 நெஞ்சிலே ஆசையை விடாதவர்களாய், வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்! 276 புறத்தோற்றத்திலே குன்றிமணியின் திறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர். 277 மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவார். 278 நேரானாலும் அம்பு கொடுமை செய்வது; வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது; மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும் 279 உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும் உயர்வுகருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம். 280