பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 அவர்களுடைய பணிவான செயல்களும் நம்புதற். குரியனவல்ல என்பதனை எட்டாம் பாடல் புலம் படுத்துகின்றது. ஒன்பதாம் பாடலும், பத்தாம் பாடலும் அத்தகைய கூடாநட்பினருடன் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனைத் தெளிவுபடுத்தி விளக்கம் செய்கின்றன. பொற்கொல்லர்கள் வைத்திருக்கும் பட்டடை. யினைக் காட்டி முதற் குறட்பா கூடாநட்பினரைக் குறிக்கின்றது. தாங்குவது போல் இருக்கும் பட்டடை, பொன்னை, நசுக்குவதற்குத் துணையானது போல, நேரம் வந்த போது இத்தகையினர் கொடுமை செய்தே தீருவர் என்பதாகும். ர்ே இடம் காணின்' என்று குறித்த குறளுண்மை சிந்திக்கத் தக்கதாகும். - - இவர்களை நம்மைச் சேர்ந்த இனத்தினர் என்றே கொள்ளுதல் கூடாது. விரைவில் மனமாற்றம் கொண்டு விடுவர் என்று இரண்டாம் பாடல் கூறுகிறது. இவர்கள் பழகுவதை, இனமல்லார் கேண்மை’ என்று இரண்டாம் பாடல் தெளிவுபடுத்துகிறது. - இத்தகைய கூடாநட்பினர் நன்கு படித்தவர்களாகவும். இருப்பார்கள். பல நல்ல நூல்களையும் கற்றிருப்பார்கள். ஆனால் மனம் தீயதாகவே இருக்கும். பகைமைக் குணத்தினையே - எண்ணத்தினையே - மனதில் வைத்திரும் பார்கள். அது பிறவிக் குணமாகவும் இருக்கும். இவர்கள் மனம் நல்லதாகவே ஆகாது. 'மன நல்லர் ஆகுதல்' என்று. மூன்றாம் பாடல் குறிப்பது சிந்தனைக்குரியது. - இந்தக் கூடாநட்பினர் முகத்தில் சிரிப்புக் காட்டிப் பேசுவர். ஆனால் மனமோ வஞ்சனையைக் கொண் டிருக்கும். வஞ்சரை அஞ்சப்படும்' என்றே குறட்பா கூறுகிறது. இவர்களைக் கண்டு நாம் அஞ்சுதல் வேண்டும். நான்காம் குறட்பா நன்கு புலப்படுத்திவிடுகிறது. ஐந்தாம் - .9-س-، نله .]وي -