பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 தின் அருமையினை உணர்த்துகிறது. இக்குறட்பா அச்செல்வ மும் பயனிழந்து போகும் என்று உணர்த்திற்று, எட்டாம் குறட்பா அவனுடைய செல்வத்தினை, நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று' என்று அறிவுறுத்தும் கருத்து நன்கு சிந்திக்கத் தக்கதாகும். "ஒப்புரவறிதல்' என்ற அதிகாரத்தில், ஐந்து, ஆறு ஏழு பாடல்களில் கூ ற ப் ப ட் டு ள் ள கருத்துண்மைகள் உடன் வைத்து எண்ணத்தக்கனவாகும். அப்படிப்பட்டவன் ஈட்டிய பொருளை யாரேனும் பிறர் கொண்டு செல்வர் என்று ஒன்பதாம் பாடல் எடுத்துக் காட்டுகிறது. புகழ் தருவதாகிய செல்வத்தினையுடையவரிடம் சிறிது காலம் காணப்படும் வறுமையானது மழை பொழியும் மேகம் வறுமை மிக்கதாயிற்று என்று சொல்வது போன்றதாகும் என்று பத்தாம் குறட்பா பகர்கின்றது. மாணாப்பிறப்பு-நிலக்குப் பொறை.நச்சப்படாதவன். உண்டாயினும் இல் - ஏதம்-நச்சுமரம்-என்பனவெல்லாம், நன்றியில் செல்வத்தின் குற்றத்தினையும் அதனைப்பெற்றவ னுடைய இழிதன்மையினையும் கூறி மெய்ப்பித்தனவாகும். 102. நாண் உடைமை முன் அதிகாரங்களில் கூறிய நல்லியல்புகள் கொண்ட மக்கள் உயர்ந்தோரானபடியால், தமக்கு ஒவ்வாத செயல் களைச் செய்வதற்கு நாணுவார்கள் என்பதனைத் தெளிவு படுத்திக் கூறுவதாகும். நன்மக்களுக்கு நாணம் என்பது யாது என்றால், செய்யும் செயல்கள் காரணமாக நாணமுறுதல் என்பதேயாகும். அப்படி இல்லாமல், மனம், மொழி, மெய்களது ஒடுக்கத்தால் வரும் நாணமோ என்றால், அது நல்ல குலமகளிர்பால் காணப்படும் நாணம் என்பதேயாகும்.