பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாரங்களின் விளக்கம் அறத்துப்பால்-பாயிரம் 1. கடவுள் வாழ்த்து முழுமுதற் பொருளானவன் கடவுள் (இறைவன்) என்றும் அவனுடைய தன்மைகள் இவையென்றும் கூறுவது. இந்த உலகம் ஆதி பகவனை முதலாக உடையது. அவன் வாலறிவன். அவள்தாள் வணங்குதல் வேண்டும். உள்ளத் தில் இருப்பவன்; அவா அற்றவன்; இறைவன், மெய்யான ஒழுக்க நெறியாளன், உவமை இல்லாதவன், அறமே கடலாகிய அந்தணன், அறிதற்கு எளிய குணாளன். ஆக அத்தகையனை உள்ளத்தில் எண்ணி வழிபடுவதே வழிபாடாகும். எழுத்து, கல்வி, அறிவு, ஒழுக்கம் முதலிய சொற்கள் இவ்வதிகாரத்தில் சிறப்பு வாய்ந்தனவாகும். அதுவே போன்று அறம், அந்தணன், மனம் முதலியனவு மாகும். மனக்கவலை மாற்றும் நெறி உணர்த்தப்பட்டது. அற ஆழி, பெருங்கடல் என்பவை கூறப்படுகின்றன. ஆசையற்ற தன்மையும் ஒழுக்க நெறியுமே இறைவனுக்கு முழுத்தன்மையாகக் கூறப்பட்டன வென்று சுருங்கக் கூறலாம், -