பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஒழுக்கமுடைமை, நீத்தார் பெருமை, நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அ வ | வ று த் த ல் முதலிய அதிகாரங்கள் ஒப்பிடுதற்குரியன. முதலிரண்டு குறட்பாக் களும் வாலறிவனை வணங்குவதே கற்றலின் பயன் என்று கூறுகின்றன. மூன்று முதல் ஆறு வரையுள்ள பாக்கள், இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்வார், பேரின்பம் பெறுவர் என்பதைக் கூறுகின்றன. ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய பாக்கள் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், வணங்கலும் செய்யாதிருத்த லால் வரும் குற்றத்தினைக் கூறுகின்றன. பத்தாம் பாடல் இறைவனை நினைப்பவர் பிறவியை அறுப்பர் என்றும், நினையாதார் பிறவி அறாமல் ஆவர் என்றும் கூறுகின்றது. திருக்குறளில் அதிகாரத் தலைப்புகளில் காணப்படும் சொற்கள் அந்தந்த அதிகாரத்திலுள்ள குறட் பாக்களில் காணப்படுகின்றன. ஆனால், இந்த அதிகாரத்தில் காணப் படும் கடவுள் வாழ்த்து' என்ற சொற்கள் குறட்பாக்களில் காணப்படவில்லை. காமத்துப் பாலில், வழுத்தினாள்' என்றும், மற்றும் வாழி, வாழிய பிறவும் நூலில் காணப்படுகின்றன. ஒன்பதாவது குறளில் வணங்குதல் காணப்படுகிறது. வாழ்த்து என்பதற்கு ஒப்பக் கொள்ளலாம். கடவுள் என்ற சொல் நூல் முழுதுமே எங்கும் இல்லை. இது கடந்து நின்ற முழுமுதற் பொருள் என்ற உண்மைப் பொருள் நிறைந்த சொல்லாகும். - இறைமாட்சி என்று அரசனைக் குறிக்கும் அதிகாரம் இருப்பதாலும், இறை, இறைவன் என்ற சொற்கள் மன்னனைக் குறித்துப் t_fo குறட்பாக்களில் கூறப் படுவதாலும், முழுமுதற் பொரு ைள க் குறிக்கும் இறைவனைப் பற்றி விளக்கம் கூறும் இந்த அதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து' என்று பெயரிடப்பட்டது.