பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H Í 6 ஆங்கு ஒர் துன்பம் என்று குறட்பா கூறுகிறது. புலவி யின் தன்மையினைப் புரிந்து கொள்ளாதவரிடம் புலத்தலி னால் பயனில்லை என்று எட்டாம் பாடல் உணர்த்துகிறது. நோதல் எலன் மற்று" என்று குறட்பா குறிக்கின்றது. ஒன்பதாம் பாடல், நீர், நிழல், புலவி, வீழுநர்இப்படியாகக் குறித்துக்காட்டி அன்புடைய நாயகரிடம்தான் புலவியும் இனிமைதரும் என்பதைக் குறிக்கின்றது. "நீரும் நிழலது இனிதே என்பதே சிந்தனைக்குரிய தாகும். ஊடலில் மெலிவுபெற்றும், அதனை விட்டிருக்கக் கூடியவரோடு கூடக்கடவேம் என்பது அவளுடைய ஆசையே யாகும் என்று பத்தாம் பாடல் தெளிவுற விளக்கம் செய்கிறது. - 132. புலவி நுணுக்கம் இது புலவியது துணுக்கம் என விரியும். அதாவது நாயகனும் நாயகியும் ஓர் அமளிக்கன் கூடி இருந்த போது நாயகனிடம்-புலத்தற்கு-பிணங்கிக் கொள்ளுவதற்குக் காரணம் இல்லாத போதும், காதல் மிகுதியால் நுண்ணிய தாக ஒரு காரணம் உள்ளதாக மனதில் நினைத்து அதனை அவன்மேல் ஏற்றி நாயகி பிணங்கிக் கொள்ளுதலாகும். நாயகியின் கூர்மையான மதிநுட்பத்தினை இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகின்றது. நாயகன் மிகவும் அழகு நிறைந்தவனாதலால், பெண் தன்மை கொண்டவர்கள் எல்லோரும் பொதுவாக கண் களால் உண்ணுவார்களாம். ஆதலால் எச்சில்பட்ட அவன் மார்பினைப் பொருந்தமாட்டாளாம். இவ்வாறு கூறி புலந்து கொள்ளுவதை முதற் குறட்பா விளக்கம் செய்கிறது. - இயல்பாக இருப்பதில் கற்பனையை ஏற்றிக் கூறுவதால் துணுக்கம் என்று கூறப்பட்டதாகும். ஊடல் நேரத்தில்