பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 சிறப்பினை ஐந்தாம் பாடல் குறிப்பிடுவது சிந்தனைக் குரியதாகும். பனுவல்,துணிபு, இறந்தாரை எண்ணல் இருமை, வகை தெரிதல், உரன் என்னும் தோட்டியான், வரன் என்னும் வைப்பு, செயற்கரிய செய்வார், ஐந்தின் வகை, நிறை மொழி, மறைமொழி, கணமேயும் காத்தல் அந்தணர் என்போர் அறவோர்,-என்பன ஆழ்ந்த உண்மை களைக் கூறுவனவாகும். பெருமை-என்ற பெயரில் தனி, அதிகாரம் உண்டு. 4. அறன் வலியுறுத்தல் அறம் இன்னதென்பதனையும் அதன் இன்றியமையாத் தன்மையினையும் கூறுவதாகும். மனத்தில் மாசின்றி இருத்தலே அறமெனப்படும். அறத்தினைவிட மிக்க உறுதி வாய்ந்தது வேறெதுவுமில்லை யென்பதனை முதல் குறட்பா விளக்குகின்றது. அந்த அறத்தின் வழி நில்லாதிருப்பின் வரும் கேட்டினை இரண்டாவது குறட்பா கூறுகின்றது. அறம் செய்யும் வழியினை மூன்றாவது பாடல் விளக்கு கின்றது. நான்காவது ஐந்தாவது பா ட ல் க ள் அறத்தின் இயல்பினை -தன்மையினை-விளக்குகின்றன. ஆறாவது பாடல், இத்தகைய சிறப்பு வாய்ந்த அறத்தினை, நிலையாத உடம்பு நிலைத்திருக்கும் போதே செய்தல் வேண்டும் என்பதனை வற்புறுத்துகின்றது. பல்லக்கு ஏழாம் பாடலில் கூறப்படுகிறது. இப்பாடலில்? 'இது என வேண்டா' என்று கூறப்படுகின்றது. பல்லக்கில் உட்கார்ந்திருப்பவனையும், சுமப்பவனையும் கா ட் டி "இந்தக் காட்சிதான் அறத்திற்கு அடையாளம்' என்பது உணர்த்தப்படுகிறது. எட்டாம் பாடல், அறமே வீடு என்றும் பேரின்பம் தரும் என்று கூறுகிறது.