பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21 அடக்கம் மேன்மையான தென்பதனை ஐந்தாவது பாடல் கூறும். ஆக, முதல் ஐந்து குறட்பாக்களும் பொதுவகையால் அடக்கத்தின் சிறப்பினை விளக்கிக் காட்டின. ஆறாவது குறட்பா மெய்யடக்கத்தினைக் கூறுகிறது. ஆமையினைக் காட்டி அறம் கூறிய முறை சிந்திக்கத் தக்க தாகும். பேசும் வாய்ச் சொற்களின் அடக்கம், அதாவது மொழி அடக்கத்தினை ஏழு, எட்டு, ஒன்பது குறட்பாக்களில் அறிகின்றோம். பத்தாம் குறட்பா மன அடக்கத்தினைக் கூறுவதாகும். பத்தாவது குறட்பா, அறம், அடக்கமுடையவனிடத்தில் தானே சென்றடையும், என்பதனைக் கூறி மிகுதியாகச் சிறப்பிக்கின்றது. உலகம் அவனைப்பாராட்டும்என்பதாகும். ஒன்பதாவது குறட்பாவில், தீயினால் சுட்டதைப் புண் ணென்றும், நாவினால் சுட்டதை வடு என்றும் கூறிய வேறு பாடு சிந்தனைக் குரியதாகும். அமரருள் உய்க்கும், அதனின் ஊங்கு இல்லை, சீர்மை பயக்கும், மலையினும் மாணப்பெரிது, செல்வம் தகைத்து, ஏமாப்பு உடைத்து, என்பனவெல்லாம் அடக்கத்தின் மேன் மையினையும் அதனால் எய்தும் பயனையும் கூறுவனவாகும். சோகாப்பர், நன்றாகாதாகிவிடும், ஆறாதே, என்பன அடக்கமிலாதார் துன்பமடைவர் என்பதைக் குறித்தன வாகும். அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து' என்பது அடக்கத்தின் நன்மைக்குச் சிகரம் வைத்தது போன்றதாகும். திருக்குறள் நூலில், பத்து அதிகாரங்கள் உடைமை' என்று' முடிகின்றன. சொல்-நா-இவைகளின் நன்மை தீமைகளை, சொல்வன்மை, இனியவை கூறல், பயனில சொல்லாமை, புறங்கூறாமை, அவையறிதல், அவை அஞ்சாமை, கேள்வி முதலிய அதிகாரங்களிலும் கண்டறிதல் சிறப்புடையதாகும். 'கற்று அடங்கல் மிகவும் மேன்மையுடைய தென்பதனைப் பத்தாவது பாடல் குறித்து நின்றது. அ. வி.-2