பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 கொடிய துன்பங்களைத் தந்தே தீரும் என்பதனை ஐந்தாம். குறட்பா கூறுகின்றது. ஆக முதல் ஐந்து பாடல்களும் கூடா வொழுக்கத்தின் குற்றங்களைக் கூறுவதாக அமைந்துள்ளன. ஆறு, ஏழு, எட்டு ஆகிய மூன்று பாக்களும் கூடா வொழுக்கத்தினரது குற்றங்களையும் அ வ ர் க. ைள அறிந்து நீக்க வேண்டும் என்பதனையும் கூறுகின்றன. ஒன்பதாம் குறட்பா அவர்களை அறிந்து கொள்ளும் வழி' யினைக் குறிக்கின்றது. பத்தாம் குறட்பா, கூடாவொழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டாம் என்று அவரது: சிறப்பினை விளக்குகின்றது. வஞ்ச மனத்தான் . படிற்று ஒழுக்கம் - நெஞ்சம்தான் அறிகுற்றம் - வலி.இல் நிலைமையான் - மேய்ந்தற்று. அல்லவை செய்தல் : புள்சிமிழ்த்தற்று - ஏதம்பலவும் தரும் வாழ்வார் - வன்கனார் - மனத்ததுமாசு ஆக . மறைந்தொழுகும் மாந்தர் - என்று கூறப்பட்டுள்ளவைகள், கூடாவொழுக்கத்தின் தீமைகளையும், தியவொழுக் கத்தினரின் கொடுமைகளையும் இழி தன்மைகளையும். நினைவு படுத்துவனவாகும். பசுவும் புலியும் - வேட்டுவனும் பறவையும் - குன்றி' மணியின் செம்மை கருமை நிறங்கள் . யாழும் அம்பும் - என்று கூறப்பட்ட உவமைகள் மிகமிகத் தெளிவாக உண்மை யினை உணர்த்து வனவாகும். மனத்தில் நிறைய வஞ்சக. அழுக்கினை வைத்துக் கொண்டு நீரில் மூழ்கிக் காட்டி’ வெளிவேடத்தால் ஏமாற்றுபவர்களை எட்டாம் குறட்பா' தெளிவு படுத்துகின்றது. பத்தாம் குறட்பாவின் விளக்கம் நன்கு உண்மையினை உணர்த்திவிடுகிறது. தவம் செய்வார்க்குத் தலைமயிரை மழித்தலும், சடையாக்கலும் வேண்டியதில்லை. ஒழுக்கம், தவஒழுக்கம் மேற்கொண்டிருத்தலே போதுமானதாகும்.