பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6? முன்வினையென்றும் பழவினையென்றும் கூறப்படும். பிறவி களின் தொடர்ச்சியென்பதாகும். இதனையே இயற்கையின் செயல் என்றும் அறியப்பட வேண்டும். இயற்கையென்பதே தெய்வம்' என்றும் குறிக்கப்படும். இயற்கையின் உதவி இல்லையென்றாலும் முயற்சி செய்வார் பயனை எய்துவர் என்பதனை தெய்வத் தான் ஆகாது எனினும் என்றகுறட்பா கூறுகின்றது. ஊழையும் புறம் காண்பர் என்று, “ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்ற குறட்பா கூறுகின்றது. இக்குறட்பாவினை, *நல் ஆறு எனினும் கொளல் தீது” என்றும், கூற்றம் குதித்த லும் கைகூடும்' என்றும், ஞாலம் கருதினும் கைகூடும்' என்பன போன்ற குறட்பாக்களுடன் வைத்துப் பார்த் தறிதல் வேண்டும். முயற்சி யென்னும் செயற்கைஅதற்குரிய பயனைத் தந்தே தீரும். முயற்சியினை விடாது செய்து கொண்டிருத்தல் வேண்டும். காலத்தின் இ ய ல் பா ல் இயற்கையின் செயல் முயற்சியினைவிடக் குன்றி இருக்குமேயானால், செயற்கை யென்னும் முயற்சி வென்றுவிடும், இயற்கையின் வலிமை வன்மையுடையதானால் செயற்கையான முயற்சியினை வென்றுவிடும். எனவே முயன்றுகொண்டே இருக்கவேண்டும். சிறு காற்று அடிக்கின்றபோது அதனைக் கடந்து மனிதன் சென்றுவிடமுடியும். இதுவே முயற்சி; ஊழ் என்னும் இயற்கையினை வென்ற தென்பதாகும், புயல் காற்று அடிக்கின்றபோது மனிதன் கடந்து செல்ல முடியவில்லை: இயற்கை முயற்சியினை அடக்கியது'என்றே கூறவேண்டும். உலக இயற்கை நிலம், நீர், காற்று, தீ, விண் என்ற ஐந்தின் கூறுபாடுகளை உடையதாகும். இவைஐந்தும் மனித உடம்பினுள்ளும் இருப்பதாகும். எனவே உலக இயற்கைக் கும் மனித வாழ்விற்கும் என்றும் இணைப்பு உண்டு. உலகியல் தத்துவ நூல்கள் பற்பல பெயர்களிலும், முறை களிலும் இக்கருத்துக்களைக் கூறுவனவாக உள்ளன.