பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 விட வன்மை படைத்தது என்பது உலகறிந்த உண்மை யாகும். உலகின் இயற்கை அமைப்புகளாகக் காணப்படும் பாகுபாடுகள் அறிந்துணர வேண்டியவைகளாகும். இயற்கை யென்னும் ஊழ் செயற்கையென்னும் முயற்சியினையும் கெடுப்பதாகும். - பொருளின் ஆக்கம் உண்டாதற்கான ஊழ் வந்துவிடுமே யானால் முயற்சியும் ஒளிவிட்டுத் தோன்றும். பொருள் அழிவதற்கான ஊழ் வந்துவிடுமேயுள்னால் மடியென்னும் சோம்பல் குடிகொண்டுவிடும் என்பத்ாகும். இதனை முதற் குறட்பா விளக்குகின்றது. - அறிவினையும் ஊழ் வன்மையுடையதாக ஆனவிடத்து கெடுத்துவிடும் என்பதனை இரண்டாம் குறட்பா குறிக் கின்றது. அறிவினையும், ஊழினையும் ஒப்பிட்டு மூன்றாம் குறட்பா விளக்கம் தருகின்றது. உலகத்தின் இயற்கை இவ்வாறு அமைந்துள்ளதென்பதனை நான்காம் குறட்பா எடுத்துக் காட்டும். இவ்வாறே பிறவற்றையும் காணுதல் வேண்டும். ஏழாம் குறட்பாவில், வகுத்தான் என்பது இயற்கையின் அமைப்பினைக் குறிப்பதாகும். நுகர்வதற்கு அதாவதுஅனுபவிப்பதற்கு ஊழ் துணை இருந்தே ஆகவேண்டும். அந்த ஊழின் துணை இல்லையென்றால், பொருள் தேடி வைத்துப் போவதை மட்டும் செய்வர் பலர். நுகர முடியாது. "துறத்தல்' என்னும் துறவற நிலைக்கும் ஊழ் இருந்தேயாகவேண்டும். தவமும் தவமுடையார்க்கு ஆகும்" என்ற குறட்பா சிந்தனைக்குரியது. இயற்கையினால் இன்ப துன்பங்கள் வருவதுண்டு என்பதனை ஒன்பதாம் குறட்பா கூறுகிறது. இருவேறு உலகத்து இயற்கை' என்ற குறட்பா வுடன் ஆரா இயற்கை" என்ற குறட்பாவினையும்: செயற்கை அறிந்தக் கடைத்தும்' என்ற குறட்பாவினையும் ஒப்பிட்டுப் பார்த்தல் சிறப்புடையதாகும். ஊழ் என்பது