பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மூன்றாம் பாடல் அவர்களின் பெருமையினைக் காட்டிற்று. உலகம் வழுக்கி விழச் செய்யும் சேற்று நிலம் போன்ற தென்பதனை ஐந்தாம் பாடல் குறிப்பால் உணர்த்தி விடுகின்றது. கேட்பினும் கேளாத்தகையவே - நுணங்கிய கேள்வியர் அல்லார் . செவியிற் சுவையுணரா - என்ற தொடர்கள் கேள்விச் செல்வம் பெறாமையினால் வரும் குற்றத்தினை யும் இழிநிலையினையும் விளக்கிக் காட்டுகின்றன. 43. அறிவு உடைமை கல்வி கேள்விகளால் ஆன அறிவோடு உண்மையறிவு உடையவனாக இரு த் த லா கு ம். அறிவு நல்லறிவு என்பதனையே குறிப்பதாகும். புல்லறிவு' என்பதும் உண்டு. புல்லறிவாண்மை’ என்றொரு அதிகாரமும் இருக்கின்றது. மனிதனுக்கு அறிவு கோட்டை போன்ற தாகும். முதற் குறட்பா அரண்' என்று கூறுகின்றது. அதனையே சிறந்த கருவி என்றும் குறிப்பிடுகிறது. இரண்டு முதல் ஆறாம் பாடல் வரை அறிவின் இலக்கணம் கூறப்படுகிறது. ஏழு எட்டு பாடல்கள் அறிவுடையவர்களின் இலக்கணத்தினைக் கூறுகின்றது, ஒன்பதாவது குறள் அறிவுடையார்க்குத் துன்பமில்லை என்று குறிப்பிடுகிறது. பத்தாம் குறள் அறிவுடையாரது உடைமையையும் மற்றையாரது இன்மையினையும் விளக்கிச் சொல்லுகிறது. அறிவுஅற்றம் காக்கும் கருவி நன்றின்பால் உய்ப்பது - மெய்ப்பொருள் காண்பது - நுண்பொருள் காண்பது - மலர்தலும் கூம்பலும் இல்லது - உலகத்தோடு அவ்வது உறைவது - ஆவது அறிவார் - அறிவார் தொழில் - எதிர தாக் காக்கும் எல்லாம் உடையார் என்று கூறியன வெல்லாம் அறிவின் பெருஞ்சிறப்பினையும் அதனை உடையாரது பெருமையினையும் எடுத்துக் காட்டுகின்றன.