பக்கம்:திருக்குறள் அதிகார விளக்கம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ን? கும் கொள்ளுதல் வேண்டும். பகைவன்மேல் போருக்கு செல்லும் அரசனுக்குக் கூறுகின்ற முறைகளை வலி அறிதல், காலம் அறிதல், இடனறிதல், முதலிய அதிகாரங்கள் கூறு வனவாகக் கொள்ளுதல் வேண்டும். தன்மீது வந்த பகை வனை எதிர்க்கும் முறையினைச் சிறப்பாக அரண் முதலிய அதிகாரங்கள் கூறும் படைச்செருக்கு முதலிய அதிகாரங்கள் போர் செய்யும் திறத்தினையும் மறவர்களின் இலக்கணத் தையும் கூறும். அரணின் புறத்திருக்கும் பகைவரின் இடத்தினை அறிதல் வேண்டும் என்பதனை முதல் நான்கு பாக்களும் கூறுகின்றன. ஐந்து ஆறு ஏழு பாடல்கள் வினை செய்தற்கு ஆன இடத்தினை அறிந்து கொள்ளுதல் இன்றியமையாதது என்று கூறின. கடைசி மூன்று குறட்பாக்களும் பகைவரைச் சந்திக்க கூடாத இடமும் அவ்வாறு சந்தித்தால் வரக்கூடியக் குற்றத்தினையும் கூறுகின்றன. பகைவர்களை சிறியர் என்று ஏளனமாக கருதுதல் மிகவும் குற்றமானது என்பதனை முதற் குறட்பா எடுத்துக் காட்டுகின்றது. அரணிலிருந்து போர் செய்தல் எப்போதும் வலிமையுடையதாகும் என்று இரண்டாம் குறள் எடுத்துக்காட்டுகிறது. நீரில் வெல்லும் முதலை அதிலிருந்து நீங்கி விட்டால் எளிதில் கொல்லப்பட்டு விடும் என்று ஐந்தாம் பாடல் குறித்துக்காட்டி இருக்கும் இடத்தினால் உண்டாகும் வலிமையினைச் சுட்டிக் காட்டிற்று. அதுவே போல, ஆறாம் குறட்பா நிலத்தில் ஒடும் தேரினையும், கடலில் ஒடும் ஒடங்களையும் குறித்துக் காட்டி இடமறிந்து செய்த லின் பெருஞ்சிறப்பினை விளக்குகிறது. பத்தாம் குறட்பா, சேற்று நிலத்தினையும், யானையினையும், நரியினையும் ஆக இம்மூன்றினையும் அமைத்து இடத்தினால் எளியவனும் வலியவனை வெல்ல முடியும் என்று மெய்ப்பிக்கின்றது. இடங்கண்டபின், அரண் சேர்ந்தாம் ஆக்கம், இடன. றிந்து போற்றார், இடன் அறிந்து, நெடும் புனலுள்