பக்கம்:திருக்குறள் உரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் 353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நனிய துடைத்து. ஐயம் நீங்கித் தெளிந்த நிலையில் உண்மை உணர்ந்தாருக்கு அண்மையில் இருப்பது மண்ணுலகம் அல்ல; விண்ணுலதமேயாகும். - அறியாமையினும் கொடியது ஐயம். அதனால் ஐயத்தின் நீங்குதல் மெய்யுணர்வு வாழ்க்கைக்கு முதற்படி. 353. 354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்உணர்வு இல்லா தவர்க்கு. ஐம்புலன்களையும் வென்று தம்நிலையில் இயக்கும் ஆற்றல் பெற்றாலும் பயனில்லை - செம்பொருள் உணராதவர்களுக்கு. ஐம்புலன்களை வெல்லுதல் மட்டுமே இன்ப அன்பினைத் தராது. அதனால்தான் புலனடக்கத்தில் வெற்றி பெற்ற முனிவர்கள், வாழ்க்கையில் தோற்றுள்ளனர்.புலனடங்காதார் போலத் தோற்றமளிக்கும் மனையற மாண்புடையார் வெற்றி பெற்றுள்ளனர் . கொங்கணரின் கதையறிக. 354. 355, எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. யாதொரு பொருளும் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும், அத்தோற்றத்தின் வழி அப்பொருளை அறியாமல்,அப்பொருளுக்குக் காரணமாக அமையும் - மெய்ந்நிலை என்ன என்று கண்டு தெளிதலே அறிவு. - பொருள்கள் நிலையாயின போலவும், இன்பந்தருவன போலவும் தோற்றமளிக்கலாம். இத்தோற்றத்தினைக் கொண்டே பொருள்களைத் துணிந்து ஏற்றுக் கொள்ளுதல் கூடாது. அப்பொருள்களின் இயல்பாய தன்மைகள் முழுதும் ஆராய்ந்து அதன் உண்மை நிலை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே அறிவுடைமை. 355. 356. கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றுஈண்டு வாரா நெறி. இம்மண்ணுலகில் உண்மை உணர்த்தும் நூல்களைக் கற்று, உண்மைப் பொருளைக் கண்டவர்கள் பிறவா நெறியில் தலைப்படுவர். 356. i04 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை