பக்கம்:திருக்குறள் உரை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் துய்க்கும்.ஆசை என்பது காற்புள்ளியேயாம். முற்றுப்புள்ளியன்று.ஆதலால் துன்பம் தொடர்ச்சியாக வரும். 369, இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பம் கெடின். ஆசை என்று சொல்லப்படுகின்ற துன்பத்துள் துன்பம் கெடின் இன்பம் இடையறாது வந்து சேரும். ஆசை.அதன் அளவிலேயே துன்பமாக இருத்தலால் துன்பத்துள் துன்பம்' என்றார். "ஈண்டும் என்பதற்கு இங்கு இம்மண்ணுலகின் எண்று பொருள் கொள்ளலாம். 369. 370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். ஒருக்காலும் நிறைவு பெறாத இயல்பினையுடைய ஆசையினை ஒருவன் நீக்கி விடின் அங்ங்ணம் ஆசையினை நீக்கிய நிலையே இறவாத இயல்பாய நிலையினைத் தரும்.ஆசைகள் அற்றநிலையே விடுபேறு என்பது கருத்து. - 370, 38.ஊழ் உயிர்கள் தமது செயல்களின் பயனை அடைந்து அனுபவிக்கும்படி செய்யும் நியதிக்கு ஊழ் என்று பெயர். அதாவது செடிகளில், மரங்களில் மலர்கள் ஊழ்த்து வெளிப்படுவதைப் போல ஒருவருடைய இன்ப துன்பங்கள் அவருடைய வாழ்க்கையிலிருந்து ஊழ்த்து உருவாகி வெளிப்படுகிறது என்பது கருத்து. செயல் என்று பொதுவாகக் கூறினாலும் சிந்தனை, எண்ணம், செயல்கள், செயல்களின் உள்நோக்கம் முதலியனவும் அடங்கும். அதாவது ஒருயிர் ஒன்றினைப் பற்றி எண்ணும்பொழுது அந்த எண்ணமே பரிணமித்து வளர்க்கும் அல்லது அழிக்கும். ஒருவன் ஆக்கத்திற்கும் அழிவிற்கும் புறச்சூழல் காரணமன்று. அவரவர்தம் எண்ணங்களும் எண்ணங்கள் வழிப்பட்ட செயல்களுமே காரணம். ஊழ் என்பது அவரவர்தம் படைப்பேயாதலால் அதனைத் தடம் மாற்றவோமாற்றிஅமைக்கவோ மனிதனால் முடியும். ஆனாலும் பழக்கங்களின் வழிப்பட்டவர்கள் 108 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை