பக்கம்:திருக்குறள் உரை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்துப்பால் வறிதே வாழ்வோர் பேதையாதல் எளிது. பேதைகள் எதையும் இழப்பர்; இருப்பதையும் இழப்பர்; இதனை இழவூழ் என்பது சரி. அதுபோலவே வாழ்க்கையின் ஒவ்வோர் அடியிலும், அறிவார்ந்த பயனடையததகக வழியில் உணர்வுடன் வாழ்வோர் எதையும் அடைவர். இது ஆகலூழ். 373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன் உண்மை அறிவே மிகும். ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் பல நூல்களைக் கற்றாலும் அவனுடைய உண்மை அறிவே மிகும். ' கற்பினும் ' என்றதால் கற்றவர் என்றாயிற்று, கற்றலே அறிவுடைமையைத் தராது என்ற கருத்து திருவள்ளுவருக்கு உண்டு. ஆதலால், கற்ற நூலின் கருத்தைச் செயற்பாட்டுக்குக் கொண்டு வரும் பொழுது அறிவு தோன்றுகிறது. இந்த அறிவுதான் வாழ்க்கையில் செயல்படும். 373. 374, இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு. இருவேறு உலகமாக உலகத்தியற்கை அமைந்துள்ளது. அதாவது செல்வராதல், தெள்ளிய அறிஞராதல் என்ற இருவேறு நிலை. 'உலகத்து இயற்கை' - என்றதால் இந்த இருவேறு நிலை மாற்றத்திற்குரியது என்றுணர்த்தியவாறு. இன்று தொழில்நுட்பம் உடையார் மாட்டுச்செல்வம் இல்லை. செல்வம் உடையார் மாட்டுத் தொழில்நுட்பம் இல்லை. இன்று தொழில்நுட்பமும் அறிவும் விற்பனைப்பொருளாக, பிழைப்புக் கருதிவிற்கப்படும் பொருளாக மாறிவிட்டது. இன்று எந்த விஞ்ஞானியும் கோடீசுவரன் இல்லை. இது மானிடச் சாதியின் இழிநிலையைக் காட்டுகிறது. 374. 375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. செல்வம் தேடுவதற்கு நல்லவை எல்லாம் தீயவாம். தீயவும் நல்லவையாம். ஊழின் காரணமாக நல்லது தீயதாகலும், தீயது நல்லதாதலும் ஆம் என்று கூறுகிறது. 110 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை