பக்கம்:திருக்குறள் உரை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 2. பொருட்பால் அறத்துப்பால் அகநிலைச் சார்புடையது. ஆங்கு முதலில் கடவுள் வாழ்த்தப் பெறுகிறார். பொருளியல் ஆட்சிக்குரியது அரசேயாம். ஆதலால் பொருட்பால் இறைமாட்சி அதிகாரத்துடன் தொடங்கப் பெறுகிறது. 'பொருட்பால்” என்று இருப்பினும் பொருளாட்சிக்குரிய அரசின் நடைமுறைகள், அரசின் உறுப்புகள், அரசை வழிநடத்தும் பெரியோர், அமைச்சு முதலியன பற்றியும் அது விரிவாகப் பேசுகிறது. பெரும்பாலும் பொருட்பாலில் ஆட்சியியலைப் பற்றி மட்டுமல்லாமல் அரசியலும் எடுத்துக் கூறப்பெற்றுள்ளது. திருக்குறள் கூறும் அரசியல், பொருளியல், சமுதாயவியல் நம்பிக்கையின்பாற்பட்டது. வாழ்வியலுக்கு இசைந்தது. இந்தியமொழிகளில் உள்ள அரசியல் நீதி நூல்கள் அனைத்திலும் சிறந்தது. திருக்குறள் கூறும் அரசியல், பொருளியல், முற்போக்கு அணியைச் சேர்ந்தவை. திருவள்ளுவர், பொதுவுடைமைத் தத்துவத்திற்குத் தந்தை என்று போற்றப்பெறும் மாமுனிவர் காரல்மார்க்கக்கும் மூத்த சிந்தனையாளர். பொதுவுடைமைக் கருத்தின் மூலங்கள் பல திருக்குறளில் காணப்படுகின்றன. இன்றைய இந்திய நாட்டுக்குத் திருக்குறள் கூறும் அரசியல், பொருளியல் முற்றிலும் ஏற்றவை. திருக்குறள்நெறியில் இந்திய அரசியல் இயங்குமானால் வளரும் வாழும். 39.இறைமாட்சி அரசிண்மாட்சி, அதாவது உலகியலையும் பொருளியலையும் முறைப்படுத்தி இயங்கும் அரசின் சிறப்புக் கூறுவது. அரசின் சிறப்பை இறைமாட்சி என்று சொன்னது எங்கணும் தங்கியிருக்கின்ற இறைபோல எங்கனும் தன்னுடைய ஆட்சியின் முறையைத் தங்க வைத்தும், தன் ஆட்சியின் எல்லைக்குட்பட்ட அனைத்து எல்லைகளிலும் நிகழ்வன அறிந்தும் செய்வன செய்தும் முறைப்படுத்தும் ஆற்றலுடையதாக அமைதலின். காலத்தின் இயல்பால் இறைவன் - அரசன் என்று கூறினாலும் முடியாட்சியை மட்டுமே சார்ந்தது திருக்குறள் என்று கருதுவதற்கில்லை. குடியாட்சி அமைவுக்குரிய கொள்கைகள் திருக்குறளில் காணப்படுகின்றன என்பதை பொருட்பால் முழுதும் கற்றால் அறியலாம். 381. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. படையும் குடியும் பொருளும் அமைச்சும் நட்பும் அரணும் என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 113