பக்கம்:திருக்குறள் உரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் சொல்லப்பட்ட ஆறு உறுப்புகளையும் ஒருசேரப் பெற்று விளங்குபவன் அரசருள் ஆண் அரிமாப் போல்வான். குடியை முதன்மைப்படுத்தாது, படையை முதன்மைப் படுத்துவது ஏன்? குடி இயல்பாய் அமைவது. படை, தயாரிக்கப்படக்கூடிய ஒனறு. தன நாட்டில் குடியை முறையாகப் பாதுகாக்கப் படை தேவை. அதனால், படை முதனிலைப் படுத்தப்பெற்றது. அமைச்சு என்பது படை, குடி கூழ் ஆகியன பற்றிச் சிறந்த முறையில் அரசுக்கு எடுத்துக்கூறி வழிநடத்துவது. அமைச்சு அரசியல் ஆட்சியியல் தொடர்புடையது. நட்பு அரசனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பங்கேற்று, அவனுடைய திறன்கள் பெருகி வளர்வதற்கு உட்சுற்றில் அமைந்த உறுப்பு நட்பு அரசனின் அரசியல், வாழ்வியல் இரண்டுக்கும் உறுப்பாக அமைந்து இயங்கிவழிநடத்துவது. 381. 382. அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு. அஞ் சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் ஆகிய இந்நாண்கும் குறையாதிருத்தல் அரசுக்கு இயல்பு. அரசனுக்கு முதற்குறளில் சொன்ன படை, குடி, கூழ் அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றைப் படைத்தல் பாதுகாத்தல் - ஆட்சி செய்தல் ஆகியவற்றிற்குரிய இயல்புகள் இக்குறளில் எடுத்தோதய பெறுகின்றன. 382. 383. துங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலன்ஆள் பவர்க்கு. நாட்டையாளும் அரசனுக்கு அரசின் பணிகளை விரைந்து செய்யும் தன்மையும், அரசின் கடமைகள் இன்னதென அறிதற்கேற்ற கல்வி அறிவும், அரசின் கடமைகளைச் செய்து முடிக்கும் மனத்திட்பமும் நீங்காதிருத்தல் வேண்டும். “தூங்காமை' என்பதற்கு உறங்காமை என்று நேரிடையாகப் பொருள் கொள்ளக்கூடாது. ஒரு செயலைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யாது காலந்தாழ்த்திச் செய்வது விழித்திருந்தாலும் உறங்கினதோடு ஒக்கும். 114 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை