பக்கம்:திருக்குறள் உரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் இறையன்று என்ற கருத்துப் பெறப்படுகிறது. அரசன் கடவுளின் பிரதிநிதி. அரசனின் ஆணை கடவுளின் ஆணை என்றெல்லாம் சொன்ன மேலைநாட்டு வழக்கையும் வடபுலத்து வழக்கையும் மறுத்தவாறு. 388. 389. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. தனது செவிகைப்பச் சொல்லப் பெறும் சொற்களையும் பொறுத்துக் கொள்ளும் பண்புடைய வேந்தனின் ஆட்சியின் கீழ் உலகம் தங்கும். செவி கைக்கும் சொற்களாவன: 1. அமைச்சர், அரசின் நெறிமுறைகளை உணர்த்தும் பொருட்டு இடித்துக் கூறவேண்டிய அவசியம் ஏற்படும்பொழுது இடித்துக் கூறும் சொற்கள். 2. குடிமக்கள் ஆற்றாமையால் கூறும் சொற்கள். 3. பகைவர்கள் சினமூட்டி அழிப்பதற்காகப் பயன்படுத்தக் கூடிய சொற்கள். 389. 390. கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி. வேண்டுவன கொடுத்தல், யாவரிடத்தும் அன்பாகவிருத்தல், நேர்மையான ஆட்சி, குடிகளைப் பேணுதல் ஆகிய இந்நான்கு செயல்களையும் உடையவன் அரசருக்கெல்லாம் விளக்கு. 1. கொடை என்றது அரசின் ஆக்கத்திற்கு அறிவுரை வழங்கும் அறிஞர், சான்றோர்க்கு வழங்குதல். 2. யாவரிடத்தும் அன்பாயிருத்தல், அதாவது, வேறுபாடு பாராட்டாது யார்மாட்டும் ஒத்த அன்பாயிருத்தல். 3. செங்கோல் இடம் நோக்கியோ, தகுதி நோக்கியோ வளைந்து கொடுக்காது. 4. குடிகளைப் பேணுதல் என்பது அறியாமை, வறுமை, பிணி, பகை ஆகியனவற்றால் கேடு வராமல் பாதுகாத்தல். 390. 40.கல்வி குடிமக்களைத் தகுதியுடையவர்களாக்குவது ஆட்சியின் கடமை. இந்தப் பணியை இனிதே நிறைவேற்ற முதல் தேவை கல்வி. கல்வி ஆள்பவருக்கும் தேவை, ஆளப்படுவோருக்கும் தேவை. அதனால், கல்வி பொது. திருவள்ளுவருக்கு முந்திய காலத்தில் கல்வியைக் கற்றல், தனி மனிதனின் கடமையாக-பொறுப்பாக இருந்தது. திருவள்ளுவர்தான் முதன் 118 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை