பக்கம்:திருக்குறள் உரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் ஒருவருக்கு அழிவு வராமல் காக்கும் கருவி, அறிவு. அறிவு, பகைவராலும் அழிக்க முடியாத உள்ளரணாகும். அறிவு மனிதரைத் துன்பத்திலிருந்து காக்கும் கருவி. 421 422.சென்ற இடத்தால் செலவிடாது தீதொரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு. மனத்தை, அது சென்றவிடத்திலெல்லாம் செல்ல விடாது தீய வழியிலிருந்து மனத்தை இழுத்து நல்ல வழியில் செலுத்துவது அறிவாம். "தீதொரீஇ' - என்றதால் மனம் இயல்பாகச் சென்ற இடம் தீய வழியில் என்பது பெறப்பட்டது. நன்றின்பால் உய்ப்பது” என்றதால் மனத்தை நன்மையின்பால் செலுத்த முயற்சி தேவை என்று உணர்த்தியவாறு அறிக. 421. 423. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. எப்பொருள் எவரெவர் சொல்லக் கேட்பினும், அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு. “யார், யார் வாய்க் கேட்பினும்' என்றதால் சொல்லுபவரின் தகுதி பற்றி ஆராயாமல் அல்லது ஏற்காமல், கேட்கப்படும் செய்தி பற்றியே முடிவு கொள்க என்று உணர்த்தியவாறு. 422. 424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறவாய் நுண்பொருள் காண்பது அறிவு. பிறர்க்குச் சொல்லும்பொழுது, அவர் ஆராயத்தக்க வகையில் எண்ணத்தைத் தூண்டி, அவர் கொாள்ளத்தக்க வகையில் எளிமையாகச் சொல்லி, தாம் பிறர்வாய்க் கேட்கும்பொழுது நுண்பொருளை அறிவது அறிவு. 424, 425. உலகம் தழிஇயது ஒட்பம் மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு. உலகம் தழுவியது நல்லறிவு. சார்புகள் கருதியும், நன்மை - தீமை கருதியும் தளர்தலுமின்றி ஒருநிலையாய் நிற்பது அறிவு. அறிவு உலகம் தழுவியது. அறியாமை சிற்றெல்லையுட் சுழல்வது. 425. 426. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு. உலகம் எந்த நிலையில் நின்று ஒழுகுகின்றதோ, அதே நிலையில் நின்று உலகத்தோடியைந்து ஒழுகுதல் அறிவு. 426. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 129