பக்கம்:திருக்குறள் உரை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தம்மொடு பழகிய ஒருவர் தமது பழகிய நட்பை முறித்து விட்டால் தாமும் முறித்துக் கொள்ளாது பழைய அன்பைப் பாராட்ட வேண்டும் என்பது கருதது. இங்ங்ணம் பழைய அன்பைப் பாராட்டினால் பற்றற்றுப் போனாரும் திரும்ப நட்புச் சுற்றமாக வருதல் கூடும். நட்புச் சுற்றமாக வராது போனாலும் தீமை செய்தலுக்கு ஒருப்படார் என்பது கருத்து. 521. 522. விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா ஆக்கம் பலவும் தரும். ஒருவருக்கு அன்பு அறாத சுற்றம் எய்துமாயின் அச்சுற்றம் அவருக்கு வளர்ச்சி குன்றாத செல்வம் பலவும் தரும். -- அன்பு என்பது உண்மையாயிருப்பின் மேலும் மேலும் அந்த அன்பு முறுகி வளரும். அன்பின் வழியதாகிய விருப்பம் குறையாது. குறையவும் கூடாது. செல்வமும் இடையீடின்றி வளர வேண்டும் என்பதை உணர்த்த 'அன்பறா ஆக்கம்' என்றார். சுற்றமாகப் பலர் கூடி தொழில் செய்து வளர்த்தலின் காரணமாக ஆக்கம் வளரும் என்றார். 522. 523. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவுஅளாக் கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. தன் சுற்றத்தினருடன் நெஞ்சு கலந்த நிலையில் கலந்து பேசாதவன் வாழ்க்கை குளத்தில் நீர் நிறைந்தது போலாகும். கரையில்லாத குளத்து நீர் புறம் போய் விடும். பயன்படாது. சுற்றத்துடன் பேசி அளவளாவி வாழாதான் வாழ்க்கையில் ஐயமும் சூழ்ச்சியும் பகையும் தோன்ற இடமுண்டு. அதனால் உள்ள செல்வமும் வம்பு வழக்குகளுக்கு ஆகி அழிந்து விடும் என்று உணர்த்தியதாகக் கொள்க. - 523. 524. சுற்றந்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். ஒருவண் பெற்ற செல்வத்தால் ஆய பயனாவது தன் சுற்றத்தாரால் சுற்றம் எனத் தழிஇக் கொள்ளப் பெற்று வாழ்தல். சுற்றம் தழிஇய வாழ்க்கை செல்வம் ஈட்டவும் துணை செய்கிறது. ஈட்டிய செல்வத்தைப் பாதுகாக்கவும் துணை செய்கிறது. துய்ப்பிலும் கூடித் துணை செய்கிறது. செல்வத்தின் பயன் சுற்றம் பேணுதலேயாம். 524, தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 159