பக்கம்:திருக்குறள் உரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கடிதோச்சுதல், குற்றம் செய்வோர் குற்றம் செய்ய அஞ்சுதலுக்கும் மெல்ல எறிதல் குற்றும் செய்வோர் அழிவினைத் தரும் என்று அஞ்சுதலுக்கு ஆளாவதைத் தவிர்க்கவும் என்பதறிக. 562, 563. வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். அரசன் குடிமக்களுக்கு அஞ்சுதலுக்குக் & Ts6ttist DITSET செயல்களைச் செய்து ஒழுகும் கொடுங்கோலனாக இருப்பின், அவன் விரைந்து கெடுதல் உறுதி. மறு ஆய்வு இல்லாத முடிவு என்பதை உணர்த்த ஒருவந்தம் என்றார். கெடுதல் தன்வினையாகக் கூறிய அமைதி அறிந்துணர்க. அதாவது, மற்றவர்கள் அஞ்சத்தக்கன செய்தொழுகுபவர் கெடுப்பார் இல்லாமலே கெடுவர் என்பது கருத்து. 563. 564. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். 'நமது அரசன் கொடியவன்' என்று குடிகளால் சொல்லப்படும் துண்பந்தரும் சொல்லைத் தோற்றுவிக்கும் அரசன் வாழ்நாளையும் செல்வத்தையும் இழப்பான். “இன்னாச் சொல்' - தப்பிப் பிழைக்கவழி காணாது உளம் நொந்து உரைக்கும் சொல் . இன்னாச் சொல் வாழ்நாளைக் குறைக்கும் ; குடிமக்கள் உறவைக் கெடுக்கும்; செல்வத்தைக் குறைக்கும் என்று முறையே அறிக. 564. 565. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. காணவிரும்பும் குடிமக்களுக்கு எளிதாகக் காணமுடியாதவனாகவும் ஒரோவழி அரிய முயற்சிக்குப் பின் கண்டபோதும் கடுத்த முகத்தானாக விளங்கும் அரசனின் பெருஞ்செல்வம், பேய் பெருஞ்செல்வம் கண்டது போலவாகும். பேய், செல்வத்தைத் துய்க்குமாறறியாது; மற்றவர்களையும் துய்க்க அனுமதிக்காது. பயனற்ற செல்வம் என்பது குறிப்பு. 565. 566. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்று ஆங்கே கெடும். அரசன் கடுஞ்சொல் சொல்பவனாகவும், கண்ணோட்ட மில்லாதவனாகவும் இருப்பின் அவனுடைய பெருஞ்செல்வம் நீடித்தலின்றி தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 171