பக்கம்:திருக்குறள் உரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் குடிமக்களுடைய அச்சத்திற்குக் காரணமாய் அமைவன கடுஞ்சொல்லும் கண்ணோட்டமின்மையுமாம். * குடிமக்கள் அஞ்சிய வழி, செல்வப்பெருக்கம் தடைப்படும்.அதனால் புதிய வருவாய் இன்றி அழிவது ஒரு வகை அழிவு.பிறிதொரு வகை அழிவு, குடிமக்கள் மேவி எதிர்த்து அழித்தல், இதற்குச் சான்று முடியாட்சிகளை எதிர்த்து நடந்த புரட்சிகளாகும். 566. 567. கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். பொறுத்தற்கியலாத கடுஞ்சொல்லும் குற்றம் செய்தவரால் தாங்குதலுக்குரிய அளவைக் கடந்த தண்டனையும் அரசனது பகையை வெல்லுதற்கு ஏற்றவலிமையாகிய கடிய இரும்பையும் கூட அராவும் அரமாம். கடுமொழியும் கையிகந்த தண்டமும் அரசனின் வலிமையைக் குறைத்து அழிவைத் தரும். அதனால் அரம் என்று உவமையாக விளக்கப் பெற்றது. 567. 568 இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச் சீறின் சிறுகும் திரு. செய்ய வேண்டியன குறித்து அமைச்சரோடு கலந்து செய்யாமல் செயல்கள் செய்துழி அரசன் தவறு செய்து அத்தவற்றுக்காகக் காரணமின்றியே அமைச்சர்களைக் கோபித்துச் சீறும் அரசனின் செல்வம் நாள்தோறும் சுருங்கும் . அரசன், தான் குற்றம் செய்துவிட்டு அக்குற்றத்தை அமைச்சர்கள் மேல் வைப்பதால் அமைச்சர்கள் ஆர்வம் குன்றுவர். அதனால் செல்வம் அழியும் என்றாயிற்று. 568. 569. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். போர் வருவதற்கு முன்பே தமக்குப் பாதுகாப்பாக அரண் செய்துகொள்ளாத அரசன், போர் வந்தபோது பாதுகாப்பின்றி அச்சத்தால் கெடுவான். வாழும்பொழுதே, எதிர்வரு நோக்கில் பாதுகாப்பு முயற்சிகள் தேவை என்றுணர்த்தியது. 569, 570. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. 172 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை