பக்கம்:திருக்குறள் உரை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் 60.ஊக்கமுடைமை உள்ளத்தின் எழுச்சியே ஊக்கமுடைமை. அதாவது வாழ்தல் விருப்பத்தின் வழிப்பட்ட ஆள்வினையுடன்-உள்ளக் கிளர்ச்சியுடன் எழுச்சியுடன் ஈடுபடுதல் ஊக்கமுடைமை. 591. உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதுஇல்லார் உடையது உடையரோ மற்று. ஊக்கம் உடையார் எல்லாவற்றையும் உடைமையாகப் பெற்றுள்ளார் என்று சொல்லப் பெறுவார். ஊக்கம் இல்லாதவர் வேறு எதனை உடைமையாகப் பெற்றிருந்தாலும் உடைமை பெற்றவராகக் கருதப் பெறமாட்டார். உள்ள எழுச்சியாகிய ஊக்கம் பெற்றிருந்தால் அஃது எல்லா உடைமைகளையும் பெற்றது போல என்று கூறினார். காரணம் ஊக்கமுடையார் எதனையும் அடைய முடியும் என்ற நம்பிக்கை. ஊக்கமில்லாதார் உடைமைகளைப் பெற்றிருந்தாலும் பெற்றிருப்பதாகக் கருதப்பட மாட்டார். ஏன்? அப்பொருளைப் பேணிக் காக்கும் திறன் அவருக்கு இருக்காது என்பது அனுபவ உண்மை. உழைப்பால் வந்த பொருளே பொருள். 594. 592. உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை நில்லாது நீங்கி விடும். ஊக்கம் உடைமையே உடைமை. பொருளுடைமை நில்லாது நீங்கிவிடும். ஊக்கம் உடையோர் பொருளாட்சி பெறுதல் உறுதி என்பதால் “ஊக்கம் உடைமை உடைமை'என்றார். ஊக்கமில்லாதார் பொருளுடைமையைக் குறுக்கு வழிகளாலும் சமுதாய விபத்துக்களாலும் அடைந்து விடுதல் உண்டு. ஆயினும் அவர்களுக்கு அந்தப் பொருளைக் காப்பாற்றிக் கொள்ளும் திறன் இருக்காது. 592. 593. ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். ஊக்கத்தை உயர்நிலை உடைமையாகப் பெற்றவர்கள் இழந்த செல்வத்திற்காக அழமாட்டார்கள். அவர்கள் பெற்றிருந்த செல்வந்தான் போயிற்றே தவிர , அவர்களுடைய செல்வத்திற்குக் காரணமாக இருந்த ஊக்கத்தை ஒருபோதும் இழக்க மாட்டார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 179