பக்கம்:திருக்குறள் உரை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் தொடங்கிய ஒரு பணியைத் தொடர்ந்து செய்து முடிக்காமல் இடையில் விடுதல் பயனைத் தராது. செய்த பணிகளைக் குறையாக விட்டவரை உலகம் விட்டுவிடும். தொடங்கிய ஒரு பணியைத் தொடர்ந்து செய்து முடிக்காமல் இடையில் விட்டு விடுவதால் பணியும் முடியாது. பயனும் இல்லை. செய்த பணியளவும் விணாகிப் பயனற்று இழப்பினையும் அவமானத்தையும் தரும். இன்றைய உலகில் வினைக்கண் வினை கெடுத்து நிற்போர் மிகுதி என்பதை உணர்க. 612. 613. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு. எல்லாருக்கும் உதவி செய்தல் என்னும் உயரிய குணம் தளராத தொழில் முயற்சியுடைமையின் கண்ணேயே தங்கும். திருக்குறள் தோன்றிய காலத்தில் தொழில் வேளாண்மை. வேளாண்மை செய்து வாழ்க்கை நடத்தியோரிடம் இருந்த பண்பு தொழில் மீதும் ஏற்றிக் கூறப்பட்டது. பிறர்க்கு உதவிசெய்யும் பெற்றியராக வாழ ஆசைப்படுவோர் தளராத உழைப்புடையோராக வாழ்தல் வேண்டும். 613. 614. தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாள்ஆண்மை போலக் கெடும். ஆளுமையும் வீரமுமில்லாத பேடி கையில் உள்ள வாளினால் என்ன பயன்? அதுபோல உழைத்துப் பொருளீட்டாதானிடம் உள்ள உதவி செய்யும் குணத்தினால் யாது பயன்? ஒரு பயனுமில்லை. பேடிகைவாள் பயன்படாமையின் காரணமாகத்துருப்பிடித்து அழியும். அதுபோல, உழைப்பில்லாதவனின் உதவி செய்யும் குணம் பொருளின்மையாலும் வறுமையாலும் அழியும். வாள் பயன்படுத்தப் பயன்படுத்தக் கூர்மையாகி வெட்டுந்திறன் கூடுதலாகப் பெறும். அதுபோலத் தளராத உழைப்பில் வளரும் செல்வம் உதவி செய்யும் பண்பை மேலும் மேலும் ஊக்கி வளர்க்கும். 614. 65. இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்துன்றும் தூண். இண்பத்தை விரும்பாது தொழிலையே விரும்பி எவண் உழைக்கின்றானோ அவன் தன்னுடைய சுற்றத்தினருடைய துன்பங்களைத் துடைத்து நீக்கித் தாங்கி நிற்கும் தூணாவான். 186 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை