பக்கம்:திருக்குறள் உரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தாம் பிறந்த குடியை வைத்தாளும் தன்மையில் வந்த குற்றம், ஒருவன் தனது சோம்பலை ஆற்றலாக மாற்றக் கெடும். 'குடியாண்மை’ என்ற சொல்லைக் குடிஆண்மை என்று பிரித்துப் பொருள் கூறுவாரும் உண்டு. இது தவறில்லை. ஆனாலும் தேவையற்றது. குடியாண்மையாவது தாம் பிறந்த குடியின்மீது மேலாண்மை செய்யக் கூடிய நிலை. 609. 610. மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான் தாஅயது எல்லாம் ஒருங்கு. சோம்பலில்லாத மன்னவன் எய்துவன், திருமால்தம் அடியினால் அளந்த எல்லாநிலத்தையும் ஒருங்கே. சோம்பல் இல்லாதார் உலகத்தையே பெறுவர் என்று கொள்க. 610. 62. ஆளிவினையுடைமை செயல்களை ஆளுமையுடன் செய்யும் திறன் பெற்றிருத்தல். செயல்களின் மயமானது இந்த உலகம். தாமாகவே கூடச் செயல்கள் நிகழும். மலைகளின் வளர்ச்சி-மலைக்காடுகளின் வளர்ச்சி போன்ற நல்ல செயல்களும், மண்ணரிப்பு முதலிய தீமைகளும் செய்வாரின்றியே நிகழும் செயல்கள். ஆயினும், இவை அழகாக பயனுடையனவாக இருப்பதில்லை. அதுபோல் காலமோ தேவைகளே உந்தும் பொழுது அறிவுணர்வும் ஆளுமையும் இன்றிச் செய்யும் செயல்கள் செயல்கள்போலத் தோன்றும். முழுப்பயன் தரா. ஆதலால் செயல்களைக் குறித்த காலத்தில் குறித்த முறையில் குறித்த பயன்கொள்ளத் தக்க வகையில் செய்வதற்குரிய ஆண் மவலிமை பெற்று வாழ்தல் ஆள்வினையுடையராதலாகும். 61. அருமை உடைத்துஎன்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். செய்யவேண்டிய பணி அருமையான. நம்மால் செய்ய இயலாது என்று தள்ளற்க. அந்தப் பணியைச் செய்ய மேற்கொள்ளும் முயற்சி பெருமையைத் தரும. மனித ஆற்றல் வளர்ச்சிக் குரியது. ஆதலால் பணி செய்ய விருப்பமுடைய மனிதனுக்கு அருமையான பணி என்று ஒன்று இல்லை. செய்யத் தொடங்கிப்பயன்தரத்தக்க வகையில் முடிந்தாலும் முடியாது போனாலும் முயற்சி பெருமை தரும். அற்பக் காரியங்களில் பெறும் வெற்றியை விடப் பெரிய பணிகளில் பெறும் தோல்வி பாராட்டுதலுக்குரியது. 611. 612. வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 185