பக்கம்:திருக்குறள் உரை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் அரசு செய்யும் ஒரு காரியம் என்பது நாட்டு மக்களின் வாழ்க்கைப் போக்கை நிர்ணயிப்பது. ஆதலால் அந்தக் காரியத்தைச் செய்யும் முன், அந்தக் காரியத்தைப் பல் வகையானும் - விளைவு. எதிர் விளைவுகளை ஆராய்ந்து அறிந்து கொள்வது அமைச்சின் பொறுப்பு. அங்ங்ணம் ஆராய்ந்து தெளிந்த முடிவுகள் கூடச் செயற்பாடின்றேல் பயனில்லை. அமைச்சர்கள் நினைத்தபடியெல்லாம் சொல்லாமல் ஒருதலையாக ஆராய்ந்து ஒருமுடிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். 634. 635. அறன்.அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும் திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை. அறநெறிகளை அறிந்து அனுபவத்தால் முதிர்ச்சிச் சொற்களைக் கூறும் அமைச்சன் என்றும், திறமைகளைத் தேர்ந்து தெளிவார்க்குத் துணை. ஒருவருடைய திறமைகளைத் தேர்தலில் அறநெறிச் சார்பும் அனுபவ முதிர்ச்சியும் துணை செய்யும். அறநெறிச் சார்பை வலியுறுத்தியதர்ல், சாதி, இனச் சார்புகள் வழிநின்று தேர்தல் செய்தல் கூடாது என்றவாறாயிற்று. 635. 636. மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. - இயற்கையாய் அமைந்த நுண்ணறிவுடன் பலநூல்கள் கற்ற அறிவும் கூடிய அமைச்சர் முன் எத்தகைய அதிநுட்பச் சூழ்ச்சிகளும் முன்னிற்கா. இயற்கையான நுண்ணறிவு, நூலறிவுடன் சேரும் பொழுதுதான் அறிவு உறுதிப்படுகிறது; செழிப்பாகிறது. நூலறிவுச் சார்பு இல்லாத மதிநுட்பம் பயனுடையதன்று. அதுபோலவே மதிநுட்பச் சார்பிலாத நூலறிவும் பயனுடையதன்று. முன்னையதால் ஒரோவழி பயன் உண்டு. பின்னையதால் பயன் கானன்பரிது. 636. 637. செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். நூலறிவின் வழி, செயல் செய்யும் திறன் அறிந்திருந்தாலும் . உலகத்தியற்கை அறிந்து செய்க. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 193