பக்கம்:திருக்குறள் உரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட்பால் 'உலகத்து இயற்கை அறிந்து செயல்' உலகத்தின் தட்ப வெப்பக் கோள்நிலைகள் அறிந்து செய்க என்று கொள்க. உலக மாந்தர் வாழ்வியல் நிகழ்வின் அமைப்பு அறிந்து செய்க என்று கொள்ளவும் கூடும். ஆனால் உலக மாந்தரின் இயல்பறிந்து ஒத்துவராவிடில் செய்யாதொழிதல் கூடாது. உலகமாந்தரின் நடையறிந்து செய்யும் திறனில் மாற்றமும் வளர்ச்சியும் தேவை என்பதே கருத்து. 637. 638. அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழைஇருந்தான் கூறல் கடன். அறியும் திறனறிந்தார் சொல்லிய அறிவைச் சொல்லப்படுபவன் அறியாது அழித்தானாயினும் அவனுக்குத் துணையாய் அமைந்த அமைச்சன் தொடர்ந்து உறுதிபயக்கும் அறிவுரைகளைக் கூறுதல் கடமை. அமைச்சுத் தொழில், கடமையைச் சார்ந்த பணியாதலால் ஆள்பவர் ஏற்காது ஒழிதல் - ஏற்றும் ஒழுகாதிருத்தல் ஆகிய குற்றங்களைக் கண்டு வாளா ஒய்ந்து விடாது அறிவுரை கூறுதல் வேண்டும் என்றது. இந்த நெறி நட்பியலுக்கும் மனையறவியலுக்கும் பொருந்தும். அறிஞர் சொல்லும் அறிவுரையை உடனடியாக ஏற்காது அல்லது ஏற்று ஒழுகாது போவதற்கு ஆள்பவரின் திறமை, அவர்தம் சூழல் முதலியன தடையாக அமைந்திருக்கலாம். இவை நிலையானதல்ல. மாறவும் கூடும். அப்போது சொல்லிய அறிவு செயற்பாட்டுக்கு வரும் அல்லவா? அதனால் தொடர்ந்து கூறுக என்றார். "கடன்' ஆவன எல்லாம் பிறப்பின்வழி அமைந்தன என்று ஒருபோதும் மாறாது ஒழியாது செய்தற்குரியன. 638. 639. பழுதுஎண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும். பக்கத்தில் இருந்து கெடுதல் எண்ணுகின்ற அமைச்சர் ஒருவர், எழுபது கோடிப் பேர் செய்யும் தீமையிலும் மிகுதியாகச் செய்வார். கெடுதல் எண்ணும் ஒரு மந்திரி எழுபது கோடி பகைவரை உண்டாக்குவார் என்றும் கொள்ளலாம். 639. 640. முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர் திறப்பாடு இலா தவர். 194 தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை