பக்கம்:திருக்குறள் உரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் செய்யப்படும் வினைகளை முறையாக ஆராய்ந்தறிந்தும் செயல்திறன் இல்லாதவர்கள் அக்காரியங்களை முடிவிலா நிலையிலேயே செய்வர். அதாவது, காரியங்களைச் செய்வதில் தோல்விகளையே தழுவுவர். தொடங்கிய ஒன்றினை முடித்தலிலேயே ஆள்வினைத் திறன் இருக்கிறது. முறைப்படச் சூழ்ந்தும் திறப்பாடில்லாதவர் முடிவிலவே செய்வர் என்றதால் ஆராய்ந்தறியும் அறிவுடைமையும் செய்யும் திறனும் ஒருங்கே அமைதல் வேண்டும் என்பதாயிற்று. 640. 65. சொல்வண்மை சொல்லப்படுவது சொல். மனம், புத்தி, சித்தம் முதலிய அகநிலை உறுப்புக்கள் ஒன்றிணைந்த நிலையில், சிந்தித்து முடிவு செய்தவற்றை மற்றவர்கள் துணையுடன் செயற்படுத்தவும் மற்றவர்கள் பயனுறவும் அயலவர்களை ஆயத்தப்படுத்தவும் சொல்லப்படுவது சொல். 'சொல்' என்பதில் உள்ள “வன்மை' என்ற சொல் வன்முறையைக் குறிக்கும் வன்மையன்று. சொல்லின் உறுதி என்றே பொருள் கொள்ள வேண்டும். சொல்லில் வன்மையாவது; அடிக்கடி மாற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லாது ஒருதலையாக ஆராய்ந்து முடிவாகச் சொல்லுதல், மேலும் எளிதில் மற்றவர்களுடைய விவாதங்களால் பயனற்றுப் போகக்கூடிய அல்லது நிலைத்து நிற்க முடியாத சொற்களாக இல்லாமல் சொற்களைத் தேர்ந்து தெளிந்து சொல்ல வேண்டும். சொற்களின் பயனீட்டமாகிய செயல் துாண்டல், நேயமிக்க உறவு, முதலியன தவறாமல் சித்திக்கும் சொற்கள் பயனுடைய சொற்கள். நல்லனவும் கூட எடுத்துக்கூறும் திறமும் பாங்கும் இன்மையால் பயனற்றுப் போகின்றன. ஒரு பொருளும் படாத சொற்கள் சொல்லும் திறத்தால் பாங்கால் பயனைத் தந்து விடுகின்றன. 641. நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம் யாநலத்து உள்ளது.உம் அன்று. ஒருவர் பெறக்கூடிய எல்லா நலன்களிலும் நாநலமே தலைசிறந்தது. நாநலம் மற்ற நலன்களிலும் அடங்கித் தோன்றுதலுடன் அந்நலன்களில் எல்லாம் சிறந்து விளங்குகின்றது. ஆக்கவும் அழிக்கவும் வல்லது சொல். செயலூக்கம், நன்று தேடல், உறவினைப் பெறுதல் ஆகியனவெல்லாம் நாநலத்தின் பயன்களேயாம். 641. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 195