பக்கம்:திருக்குறள் உரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புகழினையும், அறத்தினையும் தராத தீவினைகளை எண்றும் அறத்தினையும் புகழினையும் தராத செயல்களை ஒழித்திடுக. காலம், சூழ்நிலை, வினைகளைப் பாராமல் ஒழித்திடவேண்டும் என்பதற்காகத் தற்காலிக நன்மைகளைக் கருதிக்கூட நன்றி பயவாவினை செய்தல் கூடாது என்பதனை வலியுறுத்த “என்றும்' என்றார். 'நன்றி - நன்மை. ஆக்கம் என்பாரும் உளர். ஆக்கமும் நன்மை தருவதேயாம். 652. 653. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். தாம் மேன்மையுறுதல் வேண்டும் என்று கருதுவோர், புகழ் கெடும் செயல்களைச் செய்தலைத் தவிர்க்க வேண்டும். ஓஒதல் - ஒவ்வுதல்- தவிர்த்தல். 653. 654. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். அச்சம் இல்லாத தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்துள்படினும் பழி சுமக்கும் காரியங்களைச் செய்யார். துன்பத்திற்கு முறையான தீர்வு காண்பதே முறை. பழி சுமக்கும் வழிகள் மூலம் துன்பத்திற்குக் காணப்பெறும் தீர்வு மேலும் துண்பத்தைத் தரும். Ꮾ54. 655. எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றுஅன்ன செய்யாமை நன்று. தான் செய்த செயல்களின் எதிர் விளைவுகளைக் கண்டு என்ன செய்தோம்?’ என்று கழிவிரக்கப்படக்கூடிய செயல்களைச் செய்யற்க. மீண்டும் கழிவிரக்கத்திற்குரிய செயல்களையே பழக்க வாசனையால் செய்வானாகில் அவன் யாதொன்றும் செய்யாதிருத்தலே நன்று. “முன்னால் செய்த காரியங்களைச் செய்ததுபோல் பின்னும் செய்யாதொழிவது நன்று’ என்ற உரை 'செய்வானேல்’ என்று கூறியிருப்பதால் பொருந்தாது. - 'மற்றன்ன” - என்றது பிழை வருதலுக்குரியனவல்லாத பிறதுறைப் பணிகள் என்று கொள்வது சிறப்பு. 655. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 199