பக்கம்:திருக்குறள் உரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் “ஆராய்ந்தறிந்த கல்வி கற்கும் கல்வியை ஆராய்ந்து தெளிந்து துனிதல். ஆராய்ச்சி இல்லாத கல்வி, ஏட்டுக் கல்வி, எத்துணையும் பயன் தராது. 684. 685. தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. விரிவாக இல்லாமல் தெளிகுத்துச் சொல்லியும், தகாதனவற்றை நேரிடையாகச் சொல்லாமல் ஒதுக்கி மகிழ்ச்சி தரும் வகையில் சொல்லியும் நன்மை செய்வதே தூது. காலக் கேட்டைத் தவிர்க்க தொகுத்துச் சொல்லி' என்றார். எந்த ஒன்றை விரித்துச் சொன்னாலும் வழுக்கள் ஏற்படும்; அதைத் தவிர்க்கவும், 'தொகுத்துக் கூறுதல் என்றார். கோபம் வரக்கூடிய செய்திகளை அப்படியே எதிர்மறையாகச் சொல்லாமல் நலம் பயக்கும் வழிவகை கண்டு மகிழ்ச்சிபொங்கச் சொல்லுதல் துTது . 685. 686. கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லி காலத்தால் தக்கது அறிவதாம் தூது. நீதி நூல்களைக் கற்றுத் தெறிந்தவனும் தூது சென்ற அரசனின் வெகுளிக்கு அஞ்சாதவனும் தூதுரைக்கும் காலத்தில் சூழலையறிந்து தூதினை முடிக்குந் திறனுமுடையவனுமே தூதுவன். 686, 687. கடன்அறிந்து காலம் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. தமது கடமையை அறிந்து, (அந்தக்கடமையை) நிறைவேற்றுவதற்குரிய வகையில் காலத்தையும் இடத்தையும் அறிந்து அவற்றிற்கேற்றாற்போல எண்ணிச் சொல்லுபவன் தலைசிறந்ததுதுவன். செய்ய வேண்டிய கடமையைக் கடன்’ என்றார். உரிய தகுதி நலன்களையும் பெறுவதால் கடன் ஆயிற்று. கடமை உணர்ந்தவர்கள் காரியம் நிறைவேறத் தக்க வகையில் எண்ணிச் செய்வர்.கடமையை உணராதவர்கள் ஏனோதானோ' என்று செய்வர். எதிர் விளைவு வாராமலும் உடன்பாட்டு விளைவு உருவாகத் தக்க வகையிலும் எண்ணிச் செய்தல் வேண்டும் என்பதனால் காலமும் இடமும்’ குறிப்பிட்டார். - 687. தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை 209